தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடுக! – ஒன்றிய அரசுக்கு சு. வெங்கடேசன் எம்.பி., கண்டனம்

2 Min Read

மதுரை, நவ.24- பொங்கல் திருநாளன்று பட்டய கணக்காளர் தேர்வு நடத்தப்படுவதற்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பட்டய கணக்காளர் எனப்படும் சி.ஏ. தேர்வுகள் ஜனவரி 12, 14, 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் விழா தமிழ்நாட்டில் வரும் ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 15 ஆம் தேதி மாட்டுப் பொங்கலான உழவர் திருநாளும் 16 ஆம் தேதி திருவள்ளூர் நாள் ஆகியவை தொடர்ந்து கொண்டாடப்பட உள்ளது.

கடும் கண்டனம்
தமிழர்களின் பெரிய விழாவாக இந்த பாரம்பரிய பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நாளில் ஒன்றிய அரசு சி.ஏ. தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான தேர்வு அட்டவணையும் வெளி யிடப்பட்டுள்ளது. இதற்கு மதுரை முக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழர் பண்பாட்டை அவமதிக்கும் செயலை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளி யிட்்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில்,
“பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள். எத்தனை முறை சொன்னா லும் திருந்தப் போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவ மதிக்கும் செயலை கைவிடு” என குறிப்பிட்டுள்ளார்.

தேர்வுத் தேதிகளை மாற்றுக!
மற்றொரு பதிவில், பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் தேதிகளை மாற்றுமாறு ஒன்றிய அமைச்சருக்கும், ICAI தலைவருக்கும் கடிதம் எழுதி யுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “சி. ஏ. பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர். தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.11.2024) அன்றும், உழவர் திருநாள் (16.11.2024) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *