புதுடில்லி, ஜூலை 25 மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண் களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனிடையே, மணிப் பூர் விவகாரத்தில் இரு அவை களிலும் அமளி நீடித்து வருகிறது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20.7.2023 அன்று தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை நடக் கிறது. முதல் நாளில் இருந்தே மணிப்பூர் விவகாரம் குறித்து விவா திக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் தாக்கீது அளித்து வருகின் றனர். முதல் இரண்டு நாட்களிலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பான அமளியால் எந்த அலுவலும் நடைபெறாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
மூன்றாவது நாளாக முடக்கம்
இந்த நிலையில், மூன்றாவது நாளாக 24.7.2023 அன்று காலையில் நாடாளுமன்றம் கூடியது. மாநிலங் களவை தலைவர் ஜெக்தீப் தன்கர் விவாதத்துக்காக விதி 176-இன் கீழ் 11 தாக்கீதுகளும், விதி 267-ன் கீழ் 27 தாக்கீதுகளும் அளிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
அமளி காரணமாக அவை மதி யம் 12.30 மணி வரை ஒத்திவைக்கப் பட்டது. பாஜக உறுப்பினர்கள் சுதன்ஷு திரிவேதி மற்றும் சுஷில் மோடி மேற்கு வங்கத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என்று தாக்கீது அளித்துள்ளனர். அவைத் தலைவரான ஜெக்தீப் தன்கர் விதி 267-இன் கீழ் எந்த விவாதத்துக்கும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. அதேபோல் மக்க ளவைத் தொடங்கியதும் அவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுப்பட்டனர். ‘இண்டியா’ மணிப் பூருடன் நிற்கிறது என்று பதாகை களும் காட்டினர். தொடர் அமளி யால் மக்களவையும் மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
ஆம் ஆத்மி உறுப்பினர் இடைநீக்கம்
இதனைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மீண்டும் இரு அவைகளும் தொடங்கின. இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்தது. இந்த நிலையில், மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சஞ்சய் சிங் அவையின் மய்யப்பகுதிக்கு வந்து மணிப்பூர் விவாகரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அமைச் சர் பியூஷ் கோயல் ஆம் ஆத்மி உறுப்பினரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், குரல் வாக்கெடுப்பு மூலம் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவைத் தலைவர் தன்கர் சிங் மீதமிருக்கும் கூட்டத் தொடர் நாட்களில் இருந்து ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங்கை இடைநீக்கம் செய்தார். இதனைத் தொடர்ந்து அமளி காரணமாக அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
என்டிஏ -இந்தியா ஆர்ப்பாட்டம்
இதனிடையே, நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன் பாக, என்டிஏ, இந்தியா எம்.பி.கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகரித்துள்ள பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து, அசோக் கெலாட் தலைமையிலான அரசை நீக்க வலியுறுத்தி அம்மாநில பா.ஜ.க. எம்பிகள் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். இதனைத் தொடர்ந்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் விவா திக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.களும் காந்தி சிலை முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மணிப்பூர் விவ காரம் குறித்து அரசு நாடாளுமன் றத்தில் விவாதிக்க தயாராக இருக்கிறது. ஆனால், எதிர்க்கட் சிகள் விவாதிக்க தயாராக இல்லா மல் ஓடி ஒளிகின்றனர் என்று பாஜக உறுப்பினர்கள், அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால், மணிப்பூர் விவாகாரம் குறித்து நாள் முழுவதும் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
அதாவது, மணிப்பூர் விவாகாரம் குறித்து விதி 267-இன் கீழ் நீண்ட விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், விதி 176-இன் கீழ் மட்டுமே விவாதிக்க தயாராக இருப்பதாக அரசு தெரிவித்து வருகிறது. விதி 267 என்பது மாநிலங்களவை உறுப்பினருக்கு அவைத் தலைவரின் ஒப்புதலுடன், முன்தீர்மானிக்கப் பட்ட அவை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதற்கான சிறப்பு அதி காரத்தை வழங்குகிறது. இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரைன், ‘ரியாக்டிவ் மோடு’ நிலையில் பாஜக இருப்ப தாகவும், மணிப்பூர் பிரச்சினையை திசை திருப்ப “காப்பிகேட்” நட வடிக்கையில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இண் டியா சரியாக செயல்படுகின்றது என்பதற்கான அறிகுறிகள். மணிப் பூர் விவாகரம் தொடர்பாக எங்கள் கூட்டணி சார்பில் ஜூலை 24ஆ-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந் தோம். அதற்கு எதிர்வினையாக, எங்களை நகலெடுக்கும் விதமாக இன்று (24.7.2023) காலையில் அவசரமாக ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.