வேலூர், நவ. 23- வேலூர் மாவட்ட கழக சார்பில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 16.11.2024 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு சுயமரியாதைச் சுடரொளி பழனியப்பன் நினைவு அரங்கம் புன்னகை மருத்துவமனையில் நடைபெற்றது. மாவட்ட கழக காப்பாளர் வி. சடகோபன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் கு.இளங்கோவன், மாவட்ட அமைப்பாளர் நெ.கி. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.
மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர.அன்பரசன், மாவட்ட தலைவர் வி.இ. சிவக்குமார், மாவட்ட செயலாளர் உ. விஸ்வநாதன் ஆகியோர் நோக்கவுரை ஆற்றினார்கள்.
இக்கூட்டத்தில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் சிறப்புரையாற்றினார்
கூட்டத்தில் நவம்பர் 26 அன்று ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு விழா மாநாட்டிற்கு அனைவரும் பங்கேற்று சிறப்பிப்பது என்றும், டிசம்பர் இரண்டில் சென்னையில் நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆவது பிறந்தநாள் விழாவில் குடும்பத்துடன் பங்கேற்று பெரியார் உலகத்திற்கு நிதி உதவி அளித்து தமிழர் தலைவரை வாழ்த்தி மகிழ்வது என்றும், தந்தை பெரியார் தத்துவங்களை உலகமயமாக்குவதற்கு ஓய்வின்றி உழைத்து வரும் தமிழர் தலைவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்ப விழா விருந்து நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். மாவட்ட இளைஞர் அணி தலைவராக இ.தமிழ்தரணி, மாவட்ட இளைஞரணி செயலாளராக மு.சீனிவாசன், காட்பாடி நகர தலைவராக பொ.தயாளன், வேலூர் மாநகர இளைஞரணி தலைவராக அ.பாண்டியன், வேலூர் மாநகர மாணவர் கழகத் தலைவராக பி.யுவன் சங்கர் ராஜா ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
பொதுக்குழு உறுப்பினர் க.சிகாமணி, மாநகர தலைவர் ந.சந்திரசேகரன் மாவட்ட ப.க. துணை தலைவர் க.சையத் அலீம், நட்சத்திர செல்வன், ஓவியர் தயாளன், அணைக்கட்டு ஒன்றிய தலைவர் இப்போ ரவீந்திரன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.