பெண் கவுன்சிலர்கள் அதிகமுள்ள முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடும் இடம் பிடித்துள்ளது. நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தமுள்ள கவுன்சிலர்களில் 46% பேர் பெண்கள். இவர்களை கணக்கிட்டு அதிக பெண் கவுன்சிலர்கள் கொண்ட முதல் 10 மாநிலங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இமாச்சல் முதலிடத்திலும், தமிழ்நாடு 10ஆவது இடத்திலும் உள்ளன. தமிழ்நாட்டில் 51 விழுக்காடு பெண் கவுன்சிலர்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.