ஆசிரியர்கள் கோரிக்கை அதிகாரிகளுடன் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

சென்னை, ஜூலை26 – பழைய ஒய்வூதியம் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட பல்வேறு கோரிக் கைகள் குறித்து ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித் துறை பேச்சு வார்த்தை நடத்தியது.

பழைய ஒய்வூதியத் திட்டம், ஊக்க ஊதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

இதையடுத்து ஆசிரியர் சங்கங் களை பள்ளிக்கல்வித் துறை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.

இதற்கான முதல்கட்ட கூட்டம் பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறி வொளி, தொடக்கக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர் தலைமையில் சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள டிபிஅய் வளா கத்தில் நேற்று (25.7.2023) நடை பெற்றது.

22 சங்கங்கள்

இதில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பில் (டிஎன்-ஜாக்டோ) உள்ள 22 சங்கங் களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினர். 

அதன்பின் செய்தியாளர் களிடம் டிஎன் ஜாக்டோ அமைப் பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கு.தியாகராஜன் பேசியதாவது: 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் உள்ளஊதிய முரண்பாடுகளை களைதல், மருத்துவர்களுக்கு உள்ளதுபோல் ஆசிரியர்களுக்கும் பணிப் பாது காப்புச் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பன உட்பட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி யுள்ளோம்.

பழைய ஒய்வூதியம் உட்பட தேர்தல் வாக்குறுதிகளை தமிழ் நாடு அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையுள்ளது’’என்றார். இதேபோல், இதர ஆசிரியர் சங்கங் களுடனும் அடுத்து பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *