உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் (Happiness Index) பட்டியலில் முதன்மையில் இருக்கும் நாடுகள் அதிகமான விவாகரத்து நடக்கும் நாடுகளின் பட்டியலிலும் முதன்மையில் இருக்கின்றன. உதாரணம்:
டென்மார்க்: உலகின் மிக மகிழ்ச்சியான நாடாகவும் இருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான விவாகரத்தும் இங்கு நடக்கிறது.
இந்தியாவில் விவாகரத்து வீதம் 1,000 திருமணங்களுக்கு ஒன்றுக்கும் குறைவு. மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 140ஆவது இடத்தில்தான் இருக்கிறது.
விவாகரத்துக்குக் காரணம் என்ன?
விவாகரத்து ஆனவர்களிடம் எடுக்கப்பட்ட கணக் கெடுப்பின்படி, விவாகரத்துக்கான காரணமாக அவர்கள் விவரித்தவை:
பரஸ்பர நம்பிக்கையும், உறவின் மீதான பொறுப்பும் குறைந்ததால் – 73%
திருமணத்திற்கு வெளியேயான உறவில் ஒருவர் இருப்பது தெரிந்ததால் – 55%
மிக இளவயதில் திருமணம் செய்ததால் – 46%
அதீத எதிர்பார்ப்புகள் கொடுத்த ஏமாற்றத்தால் – 45%
திருமணத்தில் சமத்துவம் இல்லாததால் – 44%
குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டதால் – 25%
– டாக்டர் சிவபாலன்