ஹிந்தி மொழியை ஏன் திணிக்கப் பார்க்கிறார்கள்?
இதற்கு மூன்று காரணங்கள் தான் இருக்கின்றன.
முதலாவது, நாங்கள் உயர்ந்த இடத்தில் இருந்து சொல்லுகின்றோம்.
இரண்டாவது, நாங்கள் கொடுக்கும் இடத்தில் இருக்கின்றோம். நீங்கள் வாங்கும் இடத்தில் இருக்கின்றீர்கள்.
மூன்றாவது, எதைச் சொன்னாலும் இவர்கள் நம்மோடு வந்துவிடுவார்கள் என்ற நினைப்பில்.
இது மூன்றும் தமிழ்நாட்டில் நடக்கவே நடக்காது. ஏனென்றால், நாம் அவர்களை விட அறிவில் முன்னேறியவர்கள்.
– அறிஞர் அண்ணா