கேள்வி: திராவிடம் இல்லை என்றால் ஸம்ஸ்கிருதமும், ஹிந்தியும் தமிழை அழித்திருக்கும் என்கிறாரே திருமாவளவன்?
பதில்: ஸம்ஸ்கிருதம் இல்லை என்றால் திராவிடம் என்ற வார்த்தையே இருந்திருக்காது என்பது திருமாவளவனுக்குத் தெரியாது. அவரைச் சொல்லிக் குற்றம் இல்லை. 1962இல் பிறந்த அவர் தி.மு.க. கால கல்வியைத்தானே பயின்றார். (‘துக்ளக்’ 27.11.2024 பக்கம் 27)
முதலில் சமஸ்கிருதம் என்பது ஒரு தனி மொழியே இல்லை என்பது நினைவில் இருக்கட்டும். பழங்காலத்தில் பலர் பலவிதமாகப் பேசி வந்த மொழிகளிலிருந்து சொற்களைச் சேர்த்து உருவாக்கப்பட்ட ஒரு கலவை.
சமஸ்த்தம் + கிருதம்
சமஸ்த்தம் = யாவும்
கிருதம் = சேர்த்துச் செய்தது
என்று பொருள்.
இந்த யோக்கியதையில் உள்ள ஸம்ஸ்கிருதம் இல்லை என்றால் திராவிடம் என்ற வார்த்தையே இருந்திருக்காது என்கிறார் ‘துக்ளக்’ குருமூர்த்தி. அய்யர் ஆயிற்றே – அப்படித்தானே எழுதுவார்!
சமஸ்கிருதம் இல்லை என்றால் ‘திராவிடம்’ இல்லையா?
Leave a Comment