மேற்குவங்கத்தில் தடையை மீறி பதற்றமான பகுதிக்கு செல்ல முயன்ற ஒன்றிய பாஜக அமைச்சர் சுகந்தா மஜூம்தாரை காவல்துறையினர் கைது செய்தனர். பெல்டாங் காவில் அண்மையில் இரு குழுக்களிடையே விளம்பரப் பலகை தொடர்பாக மோதல் மூண்டதில் 6 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தடையை மீறி செல்ல முயன்ற மஜூம்தாரை காவல்துறை கைது செய்தது.
உலகைச் சுற்றி…
• அய்ரோப்பிய யூனியன் – லத்தீன் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து பிரான்ஸ் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
• பாகிஸ்தானின் மாலிகேலில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
• நட்புறவின் அடையாளமாக வடகொரியாவுக்கு ஆப்பிரிக்க சிங்கத்தை ரஷ்யா பரிசளித்துள்ளது.
• எரிபொருள் இறக்குமதி செலவு அதிகரிப்பால் தொடர்ந்து 4ஆவது மாதமாக ஜப்பான் வர்த்தக பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.