மவுலானா முகமதலியின் மத பக்தி

2 Min Read

மவுலானா முகம்மதலி ஒரு கூட்டத்தில் பேசும் போது இஸ்லாத்தை அழிக்க விரும்பு வோரின் கையிலிருந்து அதைக் காப்பாற்ற வேண்டு மென்றும் இதுசமயம் இஸ்லாத்துக்கு ஆபத்து வந்திருக்கிற தென்றும் சொல்லி வருகையில் “நாம் இந்துக்களுடன் நேசபாவமாயிருக்கத் தயார். ஆனால் நம்மோடு சண்டைபோட இந்துக்கள் விரும்பும் பட்சத்தில் இந்தியாவிலுள்ள 7 கோடி முஸ்லீம்களும் 21 கோடி இந்துக்களைப் பணிய வைக்கமுடியும். நமது நபிகள் நாயகம் காலத்தில் 15 பேர் சேர்ந்து ஒரு சைனியத்தை ஜெயித்து விட்டார்கள். ஆகையால் 7 கோடி மகம்மதி யர்கள் 21 கோடி இந்துக்களை ஜெயிப்பது கஷ்ட மல்ல” என்று சொன்னாராம். இதை ‘சுதேசமித்திரன்’ இந்துக்களுக்கு மகம்மதியர்கள் பேரில் துவேஷம் உண்டாகும்படி ‘மவுலானா முகமதலியின் முழக்கம்’ என்கிற தலைப்பின் கீழ் எழுதியிருக்கிறது. மவுலானா பேசியவைகளில் நமக்கொன்றும் ஆச்சரிய மில்லை. மவுலானா கணக்கில் தவறிவிட்டார் என்று எண்ணு கிறோம். 21 கோடி இந்துக்களை அடக்க 7 கோடி முஸ் லிம்கள் தேவையில்லை. இதே 21 கோடி இந்துக்கள் என்போர்களை முக்கால் கோடிக்கும் குறைவான பார்ப்பனர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாய் தலையெடுக்க வொட்டாமல் பணிய வைத்திருக்க வில்லையா? விபசாரத் தரகில் ஜீவிக்கும் பார்ப்பானனைக் கூட ஜமீன்தாரரான பார்ப்பனரல்லாத இந்து தூதுக் கடிதம் வாங்கும் போதும் “சுவாமி” என்று கூப்பிடவும், தலைவணங்கி கும்பிடவும் அவன் ஆசீர்வாதம் சொல்லி கடிதம் கொடுக்கவும் தானே நடந்து வருகிறது. ஒரு சமுகம் எவ்வளவு பெரிய எண்ணிக்கை உள்ளதானாலும் தங்களுக்குள் அன்பும் ஒற்றுமையும் இல்லாமல் ஒருவரை ஒருவர் தீண்டாதவராய், பார்க்கக் கூடாதவராய் மதித்துக்கொண்டு மக்களைப் பிரித்து வைத்துஒருவர் உழைப்பில் ஒருவர் பிழைக்க நினைத்துக் கொண்டு இருப்பவர்களை உள்ளே வைத்திருக்கும் வரையில் மிகச் சிலரால் பணிய வைத்து விடலாம்.
இதற்கனுகூலமாக நமது நாட்டில் ‘பார்ப்பனீயம்’ இருக்கும்வரை நம்மை யார் வேண்டு மானாலும், எப்படி வேண்டுமானாலும் சுலபமாய் பணிய வைக்கமுடியும். ஆதலால் மவுலானா சொல்லுவதில் கணக்குத் தவறு இருக்கிறதே தவிர அதிசயம் ஒன்றும் இல்லை. அவரும் நாம் மகமதியர்களோடு சண்டை போட நினைத்தால்தான் தன்னால் இந்துக்களைப் பணிய வைக்க முடியும் என்கிறாரே தவிர மற்றபடி பார்ப்பனர்கள் தங்களுக்கு அன்னமளிப்பவர்களைப் பணிய வைத்திருப்பதைப்போல் அல்ல. ஆதலால் மவுலானா சொன்னதில் யாரும் குற்றங் கருத மாட்டார்கள் என்றே நினைக்கிறோம்.

– குடிஅரசு – துணைத் தலையங்கம் – 23.05.1926

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *