சுயமரியாதை இயக்கத்திற்கு அரசியல் பிரதானமல்ல. ஆனால், சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை நலத்துக்கும், திட்டங்களின் வெற்றிக்கும் கேடு செய்யவே காங்கிரஸ் மூலம் பார்ப்பனர்கள் தேசியப் போர்வையைப் போட்டுக் கொண்டு சூழ்ச்சி செய்கிறார்கள் என்று நாங்கள் கருதுகிறவரை அக்காங்கிரசை ஒழிக்கும் அளவுக்குச் சுயமரியாதை இயக்கம் அரசியலைப்பற்றிப் பேசவும், அரசியலைப் பிரதானமாய்க் கொண்ட ஜஸ்டிஸ் கட்சிக்கு ஆதரவளிக்கவும் கடமைப்பட்டிருக்கிறது. ஆதலால்தான், இன்று நாங்கள் ஜஸ்டிஸ் கட்சித்தலைவர்கள் கவலையற்றோ, தைரியமற்றோ, எதிரிக்கு ஆளாகியோ, அயர்ந்துபோயோ, கட்சிக்குத் துரோகம் செய்துகொண்டோ இருக்கிறார்கள் என்றாலும் நாங்கள் அது வெகு சீக்கிரத்தில் தனது உச்சஸ்தான நிலைக்கு வரப்போகிறது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டே உழைத்துக் கொண்டிருக்கிறோம்.