திறந்தவெளி மாநாடு – தமிழர் தலைவர் சிறப்புரை ஆற்றுகிறார்
அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், தலைவர்கள் பங்கேற்பு
ஈரோடு, நவ. 22- “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” என்ற தந்தை பெரியார் அவர்கள் 1925இல் ஈரோட்டில் “சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார். அவருடைய கொள்கைகளைப் பதிவு செய்ய குடி அரசு” என்ற இதழையும் அதே ஆண்டில் தொடங்கினார் இரண்டிற்கும் 100 ஆண்டுகள். இந்த இயக்கமும், இதழும் தமிழ்நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது தங்களுக்குத் தெரிந்ததே!
தந்தை பெரியாரின் கொள்கை களைத் தாங்கி தடம் மாறாமல் தலைமை ஏற்று வழி நடத்தும் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 26.11.2024 செவ்வாய்க்கிழமை மாலையில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெறும் திறந்தவெளி மாநாட்டில் பேருரையாற்றுகிறார்.
தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் தொடக்கவுரை ஆற்ற உள்ளார், திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சுயமரியாதைச் சுடரொளிகள் படத்தைத் திறந்து வைக்கிறார், பொதுச் செயலாளர்கள் வீ. அன்புராஜ் திராவிடர் கழகக் கொடியை ஏற்றவுள்ளார்.
பெரியார் அறக்கட்டளைத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் மாநாட்டைத் திறந்து வைக்கிறார்.
தி.மு.க செய்தித் தொடர்புத்துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேராசிரியர் அருணன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றயுள்ளார்கள்.
“அன்னை ஈவெரா மணியம் மையின் தொண்டறம் என்ற நூலை திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி வெளியிட மாநில தி.மு.க சட்டத் துறை இணைச் செயலாளர் மா.சு.ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொள்கிறார்.
“உலகத் தலைவர் பெரியார்” என்ற நூலை திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப வீரபாண்டியன் வெளியிட ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான, ஈ.வெ.கி.ச.இளங்கோவன் பெற்றுக் கொள்கிறார், திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்கள் சுய மரியாதைச் சுடரொளிகள் இணையதளத்தைத் தொடங்கிவைக்கிறார்.