நாகர்கோவில்,நவ.22- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக இயக்க நூல்கள் அறிமுக விழா நிகழ்ச்சி நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கி னார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட தி.க துணைத்தலைவர் ச.நல்லபெருமாள் மாநகர கழக செயலாளர் மு.இராஜ சேகர், மாவட்ட கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழக மாநில ஒருங்கிணைப்பா ளர் உரத்தநாடு இரா. குண சேகரன் இயக்க நூல்களை அறிமுகம் செய்தார். அவருக்கு குமரிமாவட்டகழகம் சார்பாக மாவட்ட கழகத் தலைவர் இயக்க நூல்கள் வழங்கி சிறப்பு செய்தார். இளைஞரணி தலைவர்
எஸ்.அலெக்சாண்டர், இளைஞ ரணி துணை அமைப்பாளர் சந்தோஷ்குமார், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, கழக துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன், தோழர்கள் பா.சு.முத்து வைரவன் மு.குமரிச்செல்வர், மருத்துவர் கலைச்செல்வன், பிரசாந்த், அழகனாபுரம் சிதம்பரம், எ.ச.காந்தி, வினோத், அஜித், இரா.முகிலன், தாழக்குடி செல்லப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.