திருவாரூர், நவ.22- திராவிடர் கழக திருவாரூர் மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் 19.11.2024 அன்று மாலை 6.30 மணியளவில் திரு வாரூர் சிவம் நகர் கழக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
கழக மாநில ஒருங்கிணைப்பா ளர் இரா.ஜெயக்குமார், ஈரோடு மாநாடு குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழா குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அளப்பரிய பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் கழகப் பிரச்சார பணிகளை தொய்வின்றி தொடர்ந்து நடந்திட வேண்டும் என வலியுறுத்தி உரை யாற்றினார்.
மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே அருண்காந்தி அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார்
கழக சொற்பொழிவாளர்கள் தேவ.நர்மதா, கோ,செந்தமிழ்செல்வி, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் அரங்க.ஈவேரா, நன்னிலம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கரிகாலன், நன்னிலம் ஒன்றிய கழக செயலாளர் ஆறுமுகம், திருத்துறைப்பூண்டி நகரத் தலைவர் சித்தார்த்தன், திருவாரூர் நகர கழக செயலாளர் ஆறுமுகம், கொரடாச்சேரி ஒன்றிய கழக தலைவர் ஏகாம்பரம், திரு வாரூர் ஒன்றிய கழக தலைவர் கவுதமன், மாவட்ட மகளிரணி செயலாளர் சரஸ்வதி, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் நேரு, பெரியார் பெருந்தொண்டர் மருதம்மாறன், நகரத் துணைச் செயலாளர் துரைராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் பாஸ்கர், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் சிவக்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் பிளாட்டோ, திருவாரூர் ஒன்றிய மகளிரணி தலைவர் சரோஜா, நெய் குப்பை பாண்டியன், தக்கலூர் மணி, மாவட்ட விவசாய அணி செயலாளர் க. வீரையன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட திராவிடர் கழக செயலாளர் சுரேஷ்,மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீர. கோவிந்தராசு, தலைமைக் கழக அமைப்பாளர் வீ.மோகன் ஆகியோர் உரைக்கு பின் மாவட்டத் தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமை உரையாற்றினார்.
நிறைவாக ராஜ.மணிகண்டன் நன்றி உரையாற்றினார்
கூட்டத்தில், தலைமைக் கழக அமைப்பாளர் வி.மோகன், சகோதரர் கண்ணையன், மாவட்ட காப்பாளர் கங்களாஞ்சேரி இரத்தி னசாமி, தக்கலூர் கலியபெருமாள் ஆகியோர் மறைவிற்குக் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது
டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழாவில் (சுயமரியாதை நாள்) சென்னையில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து பெருந்திரளாகப் பங்கேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து விடுதலை சந்தா மற்றும் பெரியார் உலக நிதியை வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது எனவும்,
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது, மரக்கன்று நடுதல் குருதிக்கொடை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தி மகிழ்வது எனவும்,
டிசம்பர் 24 அறிவுலக ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாள் அன்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது அமைதி ஊர்வலம் நடத்துவது கழகக் கொடி ஏற்றுவது உள்ளிட்ட நிகழ்வுகளை திருவாரூர் மாவட்டத்தில் மிக சிறப்பாக நடத்துவது.
திருவாரூர் நகரில் பெரியார் நினைவு நாள் வீரவணக்க ஊர்வலம் நடத்துவது எனவும்,
டிசம்பர் 28, 29 ஆகிய நாள்களில் திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்க ளின் கூட்டமைப்பின் 13 ஆவது மாநாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தோழர்களும் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிப்பதுடன் முழு ஒத்துழைப்பு வழங்குவது எனவும்,
நவம்பர் 23 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்று சிறப்பிக்கும் குடந்தை செங்குட்டு வன் (எ) பூண்டி கோபால்சாமி அவர்களின் நூற்றாண்டு விழாவில் கழகத் தோழர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிப்பது எனவும்,
2024 டிசம்பர் மாதம் முதல் திருவாரூர் கழக மாவட்டத்தில் மாதம் ஒரு பிரச்சாரக் கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவது எனவும்,
திருவாரூர் மாவட்ட மேனாள் செயலாளர் நெய்குப்பை கணேசன் அவர்களின் 77 ஆவது பிறந்தநாள் விழாவை டிசம்பர் 11 அன்று நெய் குப்பையில் மாவட்ட கழகம் சார்பில் மிகச் சிறப்பாக நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.