கேள்வி: நீதிக்கும், சமூக நீதிக்கும் இடையேயுள்ள வேறுபாடு என்ன?
பதில்: ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ (பிறப்பில் அனைத்தும் அனைத்து ஜாதிகளும் ஒன்றே) என்று கூறும் திருக்குறள் – நீதி. எண்ணிக்கை அதிகம் உள்ள ஜாதிகளுக்கு சலுகைகள் கொடுத்து ஓட்டு வாங்கும் அரசியல் – சமூகநீதி.
(‘துக்ளக்‘, 27.11.2024, பக்கம் 26)
எவ்வளவு சாமர்த்தியம். இது பார்ப்பனர்களுக்கே உரித்தான நரித்தந்திரமும், குரங்கு சேட்டையுமாகும்.
முதலில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறள் மொழியை இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பது முக்கியமான கேள்வி.
இதே இதழில் வேறு ஓர் இடத்தில் வருணதர்மத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு என்று பதில் எழுதுகிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள்!
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று திருக்குறள் சொல்லுகிறது. ஆனால், எண்ணிக்கை அதிகம் உள்ள ஜாதிகளுக்கு சலுகைகள் கொடுத்து ஓட்டு வாங்கும் அரசியல் சமூகநீதியா என்று கிண்டலடிக்கிறார்.
சமூகநீதி – இட ஒதுக்கீடு என்பது எண்ணிக்கையில் அதிகம் இருப்பவர்களுக்குச் சலுகையாம்.
எண்ணிக்கையில் அதிகம் இருப்பவர்களுக்கு, அதற்கு ஏற்றாற்போல கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடம் அளிப்பது எப்படி சலுகையாகும்?
அப்படி என்றால், நாட்டின் நிலை எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இது ஒரு சந்தர்ப்பம்.
எண்ணிக்கையில் அதிகம் இருப்பவர்கள் சலுகை பெறும் நிலையில்தான் இருக்கிறார்கள்.
நியாயப்படி எண்ணிக்கையில் அதிகமாக இருப்பவர்களுக்கு உரிய இடங்கள் கிடைப்பது அவர்களது உரிமை.
ஆனால், இங்கே என்ன நடக்கிறது? எண்ணிக்கையில் 3 விழுக்காட்டுக்கும் கீழ் இருக்கும் பார்ப்பனர்கள் எண்ணிக்கையில் அதிகம் இருப்பவர்களுக்குச் சலுகை வழங்குகிறார்கள் என்று சொல்லும் அளவில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை மறைமுகமாக ‘துக்ளக்’ ஒப்புக்கொள்கிறது.
எண்ணிக்கையில் 3 விழுக்காடுகூட இல்லாதவர்கள்
10 விழுக்காடு இடங்களை (EWS) பறிப்பது சலுகையா – அடாவடித்தனமா?
– மயிலாடன்