சென்னை, நவ.21- இந்தியாவில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு சொத்து வரி மூலமே அதிக வருவாய் கிடைத்து வருகிறது. மொத்த சொத்து வருவாயில், சொத்து வரி மூலம் மட்டும் 70 சதவீத வருவாய் கிடைக்கிறது.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான நிதியாண்டில் பல மாநி லங்கள் சொத்துவரி மூலம் 3 முதல் 26 சதவீதம் வரை ஆண்டொன்றுக்கான கூட்டு வளர்ச்சியை கண்டுள்ளது என்று நகராட்சி நிதிகள் குறித்த இந்திய ரிசர்வ் வங்கி யின் அறிக்கையில் தெரிவித் துள்ளது.
மேலும் கடந்த 5 ஆண்டு களில் சொத்து வரி வசூலில் டில்லி 25.7 சதவீதமும், ராஜஸ்தான் 23.3 சதவீதமும், தமிழ் நாடு 22.7 சதவீதமும் ஆண்டுக்கான கூட்டு வளர்ச்சியை எட்டி உள்ளது.
அதிகசொத்து வரி வருவாய் ஈட்டி வரும் முதல் 10 மாநிலங்களில் மேற்கு வங்காளம் மிக குறைந்த அளவில் 3 சதவீத அளவிலான ஆண்டொன்றுக்கான கூட்டு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என கூறப் பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சி, நகராட்சிகளுக்கான மொத்த வருவாயில் சொத்து வரி மூலம் தெலங்கானா மாநிலம் 50 சதவீதத்தையும், கருநாடக மாநிலம் 43 சதவீதத் தையும், ஆந்திரா 35 சத வீதத்தையும், தமிழ்நாடு 27 சதவீதத்தையும் பெற்று வருகிறது. மராட்டிய மாநிலத்தின் நகராட்சி நிர்வாகம்தான் இந்தியாவில் அதிக வருவாயை கொண்ட நகராட்சி நிர்வாகமாக இருந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.