அறிவியல் குறுஞ்செய்திகள்

viduthalai
1 Min Read

⇒மலைப்பாம்புகள் 54 கிலோ எடை உள்ள மிகப்பெரிய உயிரினங்களைக் கூட அப்படியே விழுங்கிவிடும்.

⇒அணுக்கழிவை மறுசுழற்சி செய்கின்ற அமெரிக்க நிறுவனம் ஓக்லோ. இது சிறிய ரக அணுமின் நிலையங்களை உருவாக்கி வருகிறது. இதில் கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டு 1,000 வீடுகளின் மின் தேவையைப் பூர்த்தி செய்யலாம்.

⇒சீனாவில் ஒவிராப்டோரோசாரியன் இனத்தைச் சேர்ந்த டைனோசரின் தொல்லெச்சத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவை 11 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கூறுகின்றனர்.

⇒ஆஸ்திரேலிய நகரமான மெல்போர்னின் குகை ஒன்றில் புதிய சில்வண்டு இனம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அரை அங்குல அளவுள்ள இது, பழுப்பு நிற உடலும், கருப்பு நிறக் கண்களும் கொண்டுள்ளது.

⇒சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செவ்வாய் கோளில் உள்ள சில தாதுப் படிமங்களைக் கொண்டு, 35 கோடி ஆண்டுகளுக்கு முன், அங்கு கடல் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *