மறதியை வேகப்படுத்தும் மது!

viduthalai
1 Min Read

குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். மது அருந்துவதால் பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமீபத்திய ஆய்வுகளில் இதுவரை வெளிவராத பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

வயதாவதால் ஏற்படுகின்ற ஞாபகம் மறதிநோய், அல்சைமர்ஸ். மது அருந்து வதால் இந்த நோயின் பாதிப்பு அதிகமாவது தெரியவந்துள்ளது.

இந்த நோயின் பல்வேறு நிலைகளில் இருந்த 75 நோயாளிகளை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள் விஞ்ஞானிகள். அவர்களது மூளையில் ஏற்பட்டுள்ள செல் இறப்பு, செல்களுக்கு இடை யேயான தகவல் பரிமாற்றத்தில் இருக்கின்ற குழப்பம், ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகியவற்றை மது அருந்துவதால் ஏற்படுகின்ற பாதிப்பு களோடு ஒப்பிட்டுப் பார்த்தார்கள்.

இரண்டு பாதிப்புகளும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருப்பது தெரிய வந்துள்ளது. குளிர் பிரதேசங்களில் குறைந்த அளவு மது அருந்துவது என்பது அத்தியாவசியத் தேவையாக உள்ளது.
ஆனால், இந்த அளவு அதிகரிக்கும் போது அது பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும். அதிக மது அல்சைமர் நோயைத் தீவிரப்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *