சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டார்கள் என்றால் அவர்களது அரசியல் மனுதர்மம்தான். ராசாவுக்கு அரசியல் கொள்கை மனுநீதி தவறாது நடப்பது. அதனால்தான் அவர்களை மனுநீதி தவறாத குணசீலன் என்று சொல்வார்கள். பார்ப்பானை வாழ்த்தி நம்மவர்களைக் கொடுமைப்படுத்துவதும், சூத்திரர்களைத் தாசி மக்கள், வேசி மக்கள் என்று கூறுவதும், பார்ப்பனர்களால் வகுக்கப்பட்டு ஆட்சி சட்டமாகவும் கொள்ளப்பட்ட அநீதிதான் அந்த மனுநீதி — தெரியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’