போதைக்கு அடிமைப்படுத்தும் மருந்து விற்பனையைத் தடுக்க நடவடிக்கை ஒன்றிய அரசுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை வலியுறுத்தல்

2 Min Read

சென்னை, நவ. 21– போதை தரும் மருந்துகளை இணையவழியே சட்ட விரோதமாக விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவா் டாக்டா் ராஜீவ் சிங் ரகுவன்ஷிக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு அனுப்பியுள்ள கடிதம்:

மாணவா்களிடையேயும், பொது மக்களிடையேயும் போதை மாத்திரைகள் புழக்கத்தைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு தொடா் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இது தொடா்பாக சட்ட அமைப் புகள், கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

மற்றொருபுறம், ஒருவா் தொடா்ந்து பயன்படுத்தினால் அதற்கு அடிமையாக்கக் கூடிய திறன்கொண்ட டேபென்டடால் போன்ற வலி நிவாரண மருந்துகள் இணைய வழியே எளிதில் கிடைக்கின்றன. தமிழ்நாடு காவல் துறையினரும், மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தினரும் இது தொடா்பாக பல்வேறு அறிக்கைகளை அரசுக்கு சமா்ப்பித்துள்ளனா்.

இணையவழியே அத்தகைய மருந்துகளை குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் வாங்கு வதாக அவா்கள் தெரிவித்துள்ளனா். இது போன்று அடிமைப்படுத்தும் மருந்துகளை சட்ட விரோதமாக விற்பனை செய்யும் இணைய தளங்கள் குறித்த விவரங்கள் உண்மையானதாக இல்லாததால் அவா்களைக் கண்டறிய முடிவதில்லை.

இது போன்ற செயல்பாடுகள் போதை மருந்துகளுக்கு எதிரான அரசின் நடவடிக் கைகளை நீா்த்துப் போக வைக்கும் வகையில் உள்ளன. அட்டவணை எச் மற்றும் எச்1-இல் வகைப்படுத்தப்பட்டுள்ள அந்த மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றியோ, பதிவு செய்யப்பட்ட மருந்தாளுநரின் கண்காணிப்பு இன்றியோ விற்பனை செய்வது மருந்து கட்டுப்பாட்டு விதிகளுக்கு புறம்பான செயல்.

சமூக நலனுக்கும், பொது மக்களின் ஆரோக்கியத்துக்கும் அச்சுறுத்தலாகவும் விளங்கி வரும் இந்த சட்டவிரோத விற்பனையைத் தடுப்பது மாநில அதிகாரி களுக்கும் பெரும் சவாலாக உள்ளது.

எனவே, போதைக்கு அடிமைப்படுத்தும் மருந்துகளை இணையவழியே விற்பனை செய்வதைத் தடுத்து ஒழுங்குமுறைப்படுத்தவும், மக்கள் நலன் காக்கவும் ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டுத் துறை முன்வர வேண்டும்.சட்டவிரோத மருந்து விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்பதால், அத்தகைய தளங்களை சமூக நலன் கருதி நிரந்தரமாக முடக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *