கருத்து வேறுபாட்டை நீக்கா விட்டால் 2026லும் அதிமுக ஆட்சியை பிடிக்காது என, அதிமுக மேனாள் அமைச்சர் தங்கமணி எச்சரித்துள்ளார். அதிமுக கள ஆய்வுக் குழு கூட்டத்தில் பேசிய அவர், கட்சியில் நிலவிய கருத்து வேறுபாட்டால் 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்ததாக வேதனை தெரிவித்தார். மேலும், இதேநிலை நீடித்தால் மீண்டும் எதிர்க்கட்சியாகத்தான் இருப்போம் என்று கூறியுள்ளார்.