கிருட்டினகிரி மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
கிருட்டினகிரி, நவ.21 கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் டிச.2:–சுயமரியாதை நாளினை மாவட்டம் முழுவதும் கொள்கைப் பிரச்சார எழுச்சி விழாவாக சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.
கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 17.11.2024 அன்று காலை 11.30 மணியளவில் கிருட்டினகிரி பெரியார் மய்யம் அன்னை மணியம்மையார் கூட்டரங்கில் மாவட்ட கழக இளைஞரணி தலைவர் சீனிமுத்து. இராஜேசன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வெ.புகழேந்தி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்திற்கு கிருட்டினகிரி நகர கழகச் செயலாளர் ஆட்டோ அ.கோ.இராசா, ஒன்றிய கழகத் தலைவர் த.மாது, ஒன்றிய கழகச் செயலாளர் கி.வேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாநில இளைஞரணி துணைச்செயலாளர் மா.செல்லதுரை, மாவட்ட துணைத் தலைவர் வ.ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மாவட்ட ப.க.செயலாளர் க.வெங்கடேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
கூட்டத்தில் மாவட்ட ப.க. தலைவர் ச.கிருட்டினன், மாவட்ட ப.க. துணைத் தலைவர் மு.வேடியப்பன், மாவட்ட விவசாயணி தலைவர் இல.ஆறுமுகம், மத்தூர் ஒன்றிய கழகத் தலைவர் கி.முரு கேசன், காவேரிப்பட்டணம் ஒன்றிய தலைவர் பெ.செல்வம், நகரத் தலைவர் கோ.தங்கராசன், சம்பத் (எ) சாக்கப்பன், ஊற்றங்கரை விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கழக மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் ஆகியோர் இளைஞரணி செயல்பட வேண்டிய ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை விளக்கியும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 92 வயதிலும் ஓய்வில்லாமல் தந்தை பெரியார் வகுத்த ளித்த பாதையில் தடம்மாறாமல் தனிதன்மை யோடு மற்ற மற்ற தலைவர்கள் எல்லாம் இவரது செயல்பாடுகளைக் கண்டு வியக்கும் அளவில் நாட்டு மக்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆற்றிவரும் அளப்பரியா பணிகளை விளக்கிச் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட இளைஞரணி துணைச் செய லாளர் பூ.இராஜேந்திரபாபு நன்றி கூறினார்.
கூட்டத்தில், கிருட்டினகிரி கார்நேசன் திடலில் பெரியார் மய்யம் படிப்பகம் உருவாக திராவிடர் கழக சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளைக்கு இடம் வழங்கிய கிருட்டினகிரி நீதிக்கட்சி பாரம்பரிய குடும்பத்து கொள்கை வாரிசு கார்நேசன் திடல் ஆள் டிரஸ்ட் செயலாளரும் மூத்த வழக்குரைஞருமான பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி ஜி.எச்.லோகாபிராம் அவர்களது மறைவிற்கும் காவேரிப்பட்டணம் புலியாண்டூர் மு.இராமசாமி, மத்தூர் சூளகரை ஆசைத்தம்பி ஆகியோர் மறை விற்கும் இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் தெரிவித்து, இரண்டு மணித் துளிகள் அமைதி காத்து மரியாதை செலுத்தப்பட்டது.
உலகத் தலைவர் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக கிருட்டினகிரி மாவட்டத்தில் கழக இளைஞரணி சார்பாக மாநகராட்சி, நகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி, கிளைகள் தோறும் கழக இளைஞரணி அமைப்பை மாவட்டம் முழுவதும் கட்டமைத்து கழகத்தின் இனமான இலட்சிய கொடி யினை கிளைகள் வாரியாக ஏற்றுவது, தெரு முனைப்பிரச்சாரம், துண்டறிக்வாகைகள் யிலாக பிரச்சாரங்களை மேற்கொள்வது எனவும்,
உலத் தலைவர் தந்தை பெரியாரின் கொள்கை வாரிசு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக ‘விடுதலை’, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’ கழக ஏடுகளுக்கு சந்தாக்களையும், பெரியார் உலகம் நிதியைத் திரட்டியும் பரிசுகளாக வழங்குவது எனவும், அவரது பிறந்தநாளை சுயமரியாதை நாளாக மாவட்டம் முழுவதும் மரக்கன்று நடுதல், குருதிக் கொடை வழங்குவது என கொள்கைப் பிரச்சார எழுச்சி விழாவாக சிறப்பாகக் கொண்டாப்படுவது எனவும்,
வருகின்ற 24.11.2024 அன்று திருச்செங்கோட்டில் நடைபெறும் அய்ம்பெரும் விழாவிலும், 26.11.2024 அன்று தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுவிழா – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழா – மாநாட்டிற்கு இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்று சிறப்பிப்பது எனவும்,
டிசம்பர் -2 சுயமரியாதை நாள்- சென்னை பெரியார் திடலில் நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் தமிழர் தலைவரை நேரில் சந்தித்து சந்தாக்களை வழங்கி மகிழ்வது, மாவட்ட கழக இளை ஞரணி தோழர்கள் பெரும் அளவில் பங்கேற்பது எனவும்,
திருச்சியில் வருகின்ற டிசம்பர் 28, 29 ஆகிய இரு தேதிகளில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெரும் உலக பகுத்தறி வாளர்கள் மாநாட்டில் பெரும் திரளாக இளைஞரணி தோழர்கள் கலந்து கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.