இராசபாளையம், நவ.21- விருதுநகர், இராசபாளையம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 17.11.2024 அன்று மாலை 6 மணிக்கு, இராச பாளையம் பெரியார் நூற்றாண்டு படிப்பகத்தில் நடைபெற்றது.
இராசை மாவட்ட ப.க. அமைப்பா ளரும், சாத்தூர் நகர்மன்றத் துணைத் தலைவருமான பா.அசோக் தலைமை யில், விருதுநகர் மாவட்ட கழகத் தலைவர் கா.நல்லதம்பி, செயலாளர் விடுதலை தி.ஆதவன் ஆகியோர் முன்னி லையில், தலைமைக் கழக அமைப்பாளர் இல.திருப்பதி கூட்ட நோக்கங்களை விளக்கி தொடக்க உரையாற்றினார்.
தோழர்களின் கருத்துரையைத் தொடர்ந்து, மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் உரையில், இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு குறித்தும், கழக செயல் திட்டங்கள் மற்றும் பெரியார் உலகம் பணிகளை விளக்கினார்.
FIRA மாநாட்டு நன்கொடையாக கா.நல்லதம்பி ரூ.5000-, வெ.புகழேந்தி ரூ.5000-, மு.முத்தரசன் ரூ.5000, கோ.பெத்தையா ரூ.5000-, இரா.பாண்டிமுருகன் ரூ.2000- வழங்கினர். இராசபாளையம் மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவராக சாத்தூர் பா.அசோக், செயலாளராக முறம்பு கோ.பெத்தையா, அமைப்பாளராக முறம்பு மு.முத்தரசன் ஆகியோரை பொறுப்பாளர்களாக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் அறிவித்தார்.
2024 நவம்பர் 26 ஈரோட்டில் நடை பெறும் ‘குடிஅரசு’ இதழ், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டில் பெருமளவில் பங்கேற்பதெனவும், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆவது பிறந்த நாள் டிசம்பர் 2 சுயமரி யாதை நாளை மாவட்ட, நகர, ஒன்றிய அளவில் கிளைகள் தோறும் பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் குருதிக் கொடை, மருத்துவ முகாம்கள் நடத்துவதெனவும், டிசம்பர் 28,29 திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டிற்கான நிதி வசூல் மற்றும் பெருமளவில் தோழர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்புற ஏற்பாடு செய்திடவும், இயக்க இதழ்கள் சந்தாச் சேர்க்கவும், திருச்சி சிறுகனூர் பெரியார் உலகம் அமைப்புப் பணிக்கான மாவட்ட பங்களிப்பினை நிறைவு செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
மாநில ப.க. துணைத் தலைவர் ச.குருசாமி (கே.டி.சி), தென்காசி மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், பொதுக்குழு உறுப்பினர் வெ.புகழேந்தி, மாவட்ட கழக அமைப்பாளர் வெ.முரளி, ப.க. அமைப்பாளர் மா.பாரத், சிவகாசி மாநகர் செயலாளர் து.நரசிம்மராஜ், அருப்புக்கோட்டை ஒன்றியச் செயலாளர் இரா.முத் தையா, இளைஞரணிச் செயலாளர் க.திருவள்ளுவர், முறம்பு கோ.பெத் தையா, மு.முத்தரசன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். நிறைவாக இராசை நகர கழக செயலாளர் இரா.பாண்டிமுருகன் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.