பொதுமக்களைப் பாதிக்கின்ற சுங்கக் கட்டண உயர்வை உடனே ரத்து செய்க! தி.மு.க. மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்

Viduthalai
1 Min Read

அரசியல்

புதுடில்லி, ஜூலை 26 – தி.மு.க. மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்க ளவையில் விதி எண் 377இன் கீழ் சுங்கக்கட்டணம் அதிகரிப்பு பற்றிய கோரிக்கையை வலியு றுத்தினார். அதன் விவரம் வருமாறு:

ஒன்றிய சாலைப் போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நெடுஞ்சாலைகளின் சுங்கக் கட்டணம் 40 சதவீதம்  குறைக் கப்படும் என்றார். இதைப் போல கடந்த மார்ச் மாதம் 60 கி.மீ. சுற்றளவில் உள்ள 16 சுங்கச் சாவடிகள் அகற்றப்ப டும் என வாக்குறுதி அளிக் கப்பட்டது. மேலும் பயண தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த விடயத்தில் தமிழ்நாட்டை கண்டு கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரம்பில் மாநில நெடுஞ்சாலைகளை விரிவுப் படுத்திய பின் அமைக்கப்பட்டுள்ள 14 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பதும், பயனீட்டாளர் கட்டணத்தை 40 சதவீதம் குறைக்க வேண்டும் என்பதும், 60 கி.மீ. சுற்றளவில் உள்ள சுங்கச்சாவடி களை அகற்ற வேண்டும் என்பதும் தமிழ்நாடு அரசின் கோரிக்கை. ஆனால், இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

நாட்டில் 566 சுங்கச் சாவடிகள் செயல்படுகின்றன. இதில் தமிழ்நாட்டில் தான் அதிகம் என்கிற வகையில் 55 சுங்கச் சாவடிகள் உள்ளன. இந்த 55 சுங்கச் சாவடிகளில் 29 இடங்களில் தற்போது கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு ஏற்ற வகையில் கட்டணங்கள் திருத்தி அமைக்கப்பட் டுள்ளன. இந்த கட்டண உயர்வு வணிகர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களை மட்டும் பாதிப்பது இல்லை. அந்த வழியாக கொண்டு செல்லப்படும் பொருட்கள் மீதும் கூடு தல் விலை சுமத்தப்பட்டு பொதுமக்களையும் பாதிக்கும். 

எனவே மாநில அரசின் கோரிக்கை மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைச்சகம் இந்த கட்டண உயர்வு உத்தரவை உடனே ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு தமிழச்சி தங்க பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *