உண்மையில் வகுப்புவாதம் ஒழிய வேண்டுமானால், அது நாமெல்லோரும் தைரியமாய் வகுப்புவாதிகள் என்று சொல்லிக் கொள்வதில்தான் இருக்கிறதே தவிர, அதைப் பற்றிப் பித்தலாட்டமாகப் பேசுவதினாலல்ல. இம்மாதிரித்தைரியமாக, வெளிப்படையாக நாம் வகுப்புவாதிகள் என்று சொல்லிக் கொண்டு நமது வகுப்புக் கொடுமைகளையும், வகுப்பு இழிவுகளையும் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கின்ற காலத்தில் முயற்சித்துத் தீர வேண்டிய காலத்தில் இருக்கிறோம். நம் வகுப்பு இழிவும், நம் வகுப்பின்மீது மற்ற வகுப்பார் செலுத்தும் ஆதிக்கமும் ஒழிந்தாக வேண்டும்.
(‘விடுதலை’ 22.11.1974)