அரியலூர், நவ.20-அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக 10.11.2024 அன்று மாலை 5 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. அரியலூர் சிவக்கொழுந்து இல்லத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட ப.க. செயலாளர் மு. ஜெயராஜ் தலைமையேற்க, தலைமைக்கழக அமைப்பாளர் க.சிந்தனைச்செல்வன், மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில ப.க. அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி திருச்சியில் நடைபெற உள்ள பகுத்தறிவாளர் கழக மாநாட்டின் சிறப்புகளை பற்றியும் பொறுப்பா ளர்கள் தோழர்கள் பங்கேற்பு குறித்தும் நிதி வசூல் குறித்தும் விளக்கி சிறப்புரையாற்றினார். ரவி நன்றி கூறினார்.
கூட்டத்தில், எதிர்வரும் டிசம்பர் 28, 29 ஆகிய நாள்களில் திருச்சியில் நடைபெற உள்ள அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கங்க ளின் மாநாட்டிற்கு அரியலூர் மாவட்டத்திலிருந்து தோழர்கள் பெருந்தி ரளாக பங்கேற்பதெனவும் பெருமளவில் நிதி வசூல் செய்து கொடுப்பது எனவும், ஆசிரியர்களுக்கு பகுத்தறிவு மனப்பான்மையை வளர்க்கும் பயிற்சிப் பட்டறையை அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக நடத்திடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது .
இக்கூட்டத்தில், மாவட்ட இணைச்செயலாளர் ரத்தின ராமச்சந்தி ரன் மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன் செந்துறை ஒன்றிய பொறுப்பாளர்கள் ராசா செல்வகுமார் மு. முத்தமிழ்செல்வன், அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, ஆட்டோ தர்மா, ஆசிரியர்கள்
பா. ஆனந்தராஜா, வெ.இராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.