திருச்சி, நவ.20- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள நாகம்மையார் கலையரங்கத்தில் 18.11.2024 அன்று காலை 11.00 மணியளவில், பன்னாட்டு ‘மாணவர் நாளை’ முன்னிட்டு, பள்ளியின் போதைப் பொருள் ஒழிப்புக் குழு சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்விற்குப் பள்ளியின் முதல்வர் முனைவர் க.வனிதா அவர்கள் தலைமையேற்க, பள்ளியின், முதுகலை கணிதம் மற்றும் வணிகக் கணித ஆசிரியர் அமலபிரகாஷ் சிறப்பு அமைப்பாளராகக் கலந்து கொண்டார்.
மொழி வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் பள்ளியின் முதுகலை தமிழாசிரியரும், போதைப் பொருள் ஒழிப்புக் குழுவின் பொறுப்பாளருமான நா.அருண் பிரசாத் வரவேற்புரை வழங்கி வந்தோரை வரவேற்றார்.
தொடர்ந்து தலைமையுரை யாற்றிய பள்ளி முதல்வர், போதைப் பொருள் பயன்பாட்டால் இளைய சமுதாயம் அடையும் சீரழிவையும், அதிலிருந்து தப்பிக்க நாம் செய்ய வேண்டிய வழிமுறைகள் மற்றும் நிகழ்வு குறித்து விளக்கிக் கூறி மாணவர்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி.செல்வி. த.கிருபாகரி போதைப் பொருள் ஒழிப்பு குறித்தும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இவற்றிலிருந்து மாணவர்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று கூறுவதையும் பற்றி பல்வேறு தகவல்களைக் குறித்து மிகச் சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார்.
பள்ளியின் முதுகலை கணித ஆசிரியர் அமல பிரகாஷ் நோக்க வுரை நிகழ்த்தினார்.
அவர்தம் நோக்கவுரையில், போதைப் பொருட்கள் மாணவர் களின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்தும், நல்ல நண்பர்களை அமைத்துக் கொள்ள வேண்டியதன் தேவை யையும் எடுத்துரைத்தார். மேலும், போதைப் பொருள் பழக்கம் என்பது மாணவர்களின் ஒழுக்கம் சார்ந்த பண்புகளுக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதைத் தவிர்க்கும் வழிவகைகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும், உரை நிகழ்த்திய தோடு போதைப் பொருள் இல்லாத வருங்காலம் அமையச் செய்வதற்கான உறுதிமொழியை வாசித்தளித்து மாணவர்களையும் உறுதிமொழி ஏற்கச் செய்தார்.
நிகழ்வின் நிறைவாகப் பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியரும் பள்ளியின் போதைப் பொருள் ஒழிப்புக் குழுவின் பொறுப் பாளருமான பாபி பிரசன்னா நன்றியுரை வழங்க நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறை வுற்றது.
முன்னதாக பன்னாட்டு மாணவர் நாள் சிறப்பு நிகழ்வாக மூன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு போதைப் பொருளின் தீமைகள் குறித்த ஓவியப் போட்டியும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் போதைப் பொருள் இல்லாத சமுதாயம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடத்தப்பட்டு, வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப் பட்டன.