சென்னை, நவ. 20- எல்.அய்.சி. இணைய தளத்தை ஹிந்தி மொழிக்கு மாற்றுவதா ஹிந்தியாவின் பன்முகத் தன்மைக்கு ஏற்பட்ட கேள்விக்குறி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் கூறியதாவது:
எல்அய்சி இணையதளம் ஹிந்தி திணிப்புக் கான கருவியாக சுருகப்பட்டுள்ளது ஆங்கில மொழிக்கு மாற்றுவதற்கான தெரிவும் கூட ஹிந்தியில் தான் உள்ளது. இது ஹிந்தியாவின் மொழி பன்மை தத்து வத்தை நசுக்கும் வலுக் கட்டாயமான மொழித் திணிப்பு போன்ற வேறு அல்ல. ஹிந்தியர்கள் அனைவரின் ஆதரவோடும் வளர்ந்தது தான் எல்.அய்.சி. அத்தகைய ஒரு நிறுவனம் தனது வளர்ச்சிக்கு பங்களித்த பெரும்பான்மையான மக்களை இப்படி எல்லாம் வஞ்சிக்க துணியலாமா ஒன்றிய அரசு மேற்கொண்ட இந்த மொழி கொடுங் கொன்மையை நிறுத்தி பழைய ஆங்கிலத்திற்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.