அப்பட்டமான ஹிந்தித் திணிப்பு இது!
தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டனம்!
ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) இணையதள முகப்புப் பக்கம் முழுக்க ஹிந்திமயம் ஆக்கப்பட்டுள்ளது. ஹிந்தி தெரிந்தால் மட்டும்தான் உங்களால் அப்பக்கத்திற்குள் எந்தத் தகவலையும் பெற முடியும் என்பது அப்பட்டமான ஹிந்தித் திணிப்பு!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது ஒன்றிய பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அரசுக்குக் குறைந்தபட்ச மதிப்பும் இல்லை என்பதைத்தான் அவர்களின் இத்தகைய மொழி-பண்பாட்டுத் திணிப்பு நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.
மொழியைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கும் வாய்ப்பை வழக்கமாக இணையதளங்களில் வழங்கு வார்கள். ஆனால், அப்படி ஆங்கி லத்தில் (En) பார்க்கலாம் என்ற வாய்ப்பையும் கூட ஹிந்தி மொழி தெரிந்தவர்கள் மட்டுமே புரிந்துகொள்ளும் வகையில் ஹிந்தியில் கொடுத்திருப்பது மூர்க்கத்தனமானதாகும்.
ஒன்றிய அரசு, எல்.அய்.சி. நிர்வாகம் ஆகியோரின் இந்த நடவடிக்கை ஹிந்தி பேசாத இந்தி யாவின் பெருவாரியான மக்களை அவமதிப்பது மட்டுமன்று… அவர்களின் வாழ்க்கை நம்பிக் கையை, உரிமையைப் பற்றிக் கவலைப்படாத செயலாகும்; இது கண்டனத்திற்குரியதாகும்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
19.11.2024
குறிப்பு: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எல்.அய்.சி. இணைய தளத்தின் முகப்பில் இத்தவறு நேர்ந்தது என்று எல்.அய்.சி. நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. எதிர்ப்புக்குப் பணிந்ததை இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள்.