அரூர், நவ.19- அரூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் கடந்த 15.11.2024 அன்று மாலை 5 மணி அளவில் பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.
திராவிடர் கழக மாநில இளை ஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி தலைமையேற்று கூட்டத்தின் நோக்கத்தைப் பற்றி பேசினார். மாவட்ட கழக இளைஞரணி தலைவர் த.மு.யாழ்திலீபன் அனைவரையும் வரவேற்று ஒருங்கிணைத்து நடத்தினார். மாவட்ட கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் கு.தங்கராஜ், மாவட்ட துணைச் செயலாளர் வழக்குரைஞர் வடிவேலன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன், மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை ஆகி யோர் கருத்துரையாற்றினர்.
தமிழர் தலைவர், திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மாவட்ட இளைஞரணி சார்பில், மாசு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கும் வகையில் செடி நடுதல்,நகரம், பேரூர், என முக்கிய இடங்களில் தந்தை பெரியார் பொன்மொழிகளையும், பகுத்தறிவு கருத்துகளையும் எழுதி வைத்தல், கழகத் தோழர்கள் இருக்கும் இடங்களில் கழகக் கொடியினை ஏற்றுதல் எனவும்,
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு இளைஞரணி சார்பில் விடுதலை சந்தாக்களை சேர்த்து அளிப்பது, ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்வது எனவும்,
தமிழர் தலைவர் ஆசிரியர் 92 ஆம் ஆண்டு பிறந்தநாளை ஆங்காங்கே இனிப்பு வழங்கிக் கொண்டாடுவது எனவும், அன்று சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் அய்யனார் முயற்சி யில் பயர்நத்தம் கிராமத்தில் கழகக் கொடியினை ஏற்றியது, அதிகாரப்பட்டி, புதுப்பட்டி ஆகிய இடங்களில் இருந்த பெரியார் சிலையை புனரமித்தமைக்கும் கூட்டம் பாராட்டினை தெரி வித்துக் கொள்கிறது.
தருமபுரி அரசு அவ்வையார் மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளுவர் படத்தை காவி உடையில் வரைந்து இருந்ததை மாற்றி அமைக்க துணை நின்ற மாநில இளைஞரணி துணை செயலாளர் மா. செல்லதுரைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
புதிய பொறுப்பாளர்களாக அரூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் பாளையம் சஞ்சீவன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் வேப்பம்பட்டி கு.ராகுல், கடத்தூர் ஒன்றிய இளைஞரணி தலைவராக ஆ.பிரதாப் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
கூட்டத்தில் பங்கேற்றோர்: மாவட்ட மாணவர் கழகத் தலைவர் சாய் குமார், பாப்பி ரெட்டிப்பட்டி ஒன்றிய தலைவர் அய்யனார், கடத்தூர் ஒன்றிய தலைவர் பிரதாப், அரூர் ஒன்றிய தலைவர் சஞ்சீவன், செயலாளர் வேப்பம்பட்டி ராகுல், குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் அரிகரன், மாவட்ட மாணவர் கழக துணை செயலாளர் பெரியார், பாப்பிரெட்டிப்பட்டி நகர பகுத்தறிவாளர்கள் பொறுப்பாளர் பூபேஷ், மாணவர் கழகத் தோழர் தோழர் ஹரிஷ் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டனர்.
நிறைவாக மாவட்ட மாணவர் கழகத் தலைவர் சாய்குமார் நன்றி கூறினார்.