சோழிங்கநல்லூர், நவ.19 கடந்த 3.11.2024 அன்று சோழிங்கநல்லூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு தலைமையில், மாவட்டக் காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அடுத்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், விடுதலை நகர் நூலகத்தின் முன்புறம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலையை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைக்க இருக்கிறார்கள்.
அந்த சிலை திறப்பு விழாவை சீரோடும் சிறப்போடும் நடத்துவது எனவும், அதற்காக நமது பற்றா ளர்களிடத்தில் நன்கொடை பெற சிறப்பான களப்பணி ஆற்ற வேண்டும் எனவும் தீர்மா னிக்கப்பட்டது.
அடுத்து வரவிருக்கின்ற, ஆசிரியர் அவர்களின் 92 ஆவது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடுவது எனவும், அதை முன்னிட்டு ஆங்காங்கு சுவர் விளம்பரம் செய்வது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மாநில பகுத்தறிவாளர் கழக செயலாளர்தோைழர். வெங்கடே சன் கலந்துகொண்டு பல ஆலோச னைகளை வழங்கினார்.
கீழ்க்கண்ட தோழர்கள் கலந்து கொண்டு, கூட்டத்தில் ஒரு மனதாக எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு, முழு ஒத்துழைப்புக் கொடுப்பதாக உறுதி கூறினார்கள்.
மாவட்ட துணைத் தலைவர் தமிழ் இனியன், மாவட்ட ப.க. அமைப்பாளர் பி.சி.ஜெயராமன்.
மாவட்ட ப.க. தலைவர் தா.ஆனந்தன், மாவட்ட இளை ஞரணி தலைவர் நித்தியானந்தம்.
மாவட்ட ப.க. செயலாளர் ஜே.குமார், மாவட்ட தொழிலாள ரணி மணிகண்டன்
மாவட்ட ப.க.து. தலைவர் மடிப்பாக்கம் அரசு, மடிப்பாக்கம் தயாளன் தி.மு.க. எம்.துரைராஜ்
தேவி சக்திவேல் மாவட்ட மகளிரணி தலைவி, ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்.
மேடவாக்கம் குணசேகரன், நீலாங்கரை ராஜேந்திரன்.
நிறைவாக மாவட்ட மகளிரணி தலைவி தேவி சக்திவேல் நன்றி யுரை ஆற்றினார்.