தருமபுரி, நவ.19- தருமபுரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 16.11.2024 அன்று காலை 10 மணிக்கு, தருமபுரி பெரியார் மன்றத்தில். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை தலைமையில் நடைபெற்றது. கண்.இராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்,
நிகழ்வின் தொடக்கமாக மாவட்டச் செயலாளர் பீம.தமிழ்பிரபாகரன் நோக்கவுரை நிகழ்த்தினார்.
இதன் தொடர்ச்சியாக மாவட்டத் துணைத் தலைவர் இளைய.மாதன், தொழிலாளரணி தலைவர் மு.சிசுபாலன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் க.சின்னராஜ், பெ.கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் க.கதிர் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
மாநில இளைஞரணி செய லாளர் நாத்திக.பொன்முடி, தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் சிறப்புரையில் இளைஞரணி கட்டமைப்பிற்கான கருத்துரை வழங்கினர்.
இந்நிகழ்வில் அரூர் கழக மாவட்டத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மகளிர் பாசறை செயலாளர் பெ.கோகிலா, பாப்பாரப்பட்டி ஒன்றியத் தலை வர் ம.சுந்தரம், விவசாய அணி தலைவர் ஊமை.காந்தி, மேனாள் மாவட்டத் தலைவர் வீ.சிவாஜி, தொழிலாளரணி செயலாளர் பெ.மாணிக்கம், பாப்பாரப்பட்டி நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புதிய பொறுப்பாளர்கள்
1. மாவட்ட இளைஞரணித் தலைவர் மா.முனியப்பன்,
2.மாவட்ட செயலாளர் தே.சத்தியராஜ்,
3. நகர இளைஞரணி செய லாளர் மு.அர்ச்சுனன்,
4.நகர இளைஞரணி து.செய லாளர் கண்.இராமச்சந்திரன் ஆகிய தோழர்களை புதிய இளை ஞரணி பொறுப்பாளர்களாக இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், கிளை, ஒன்றிய, மாவட்ட கழகங்களில் இளை ஞரணியை ஏற்படுத்துதல்,
டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் இளைஞரணி சார்பில் ஆசிரியர் வீரமணி குருதிக் கொடை இயக்கம் சார்பில் குருதிக் கொடை முகாம் நடத்துவது, டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் நிகழ்வில் பெருந்திரளாக இளைஞரணி தோழர்களை பங்குபெறச் செய்து ‘விடுதலை’ சந்தாக்களை வழங்குவது, நவம்பர் 24 திருச்செங்கோடு அய்ம்பெரும் விழாவிலும், டிசம்பர் 28, 29 ஆகிய நாள்களில் திருச்சியில் நடைபெறும் நாத்திக மாநாட்டில் இளைஞரணி தோழர்களை பெருந்திரளாக கலந்துகொள்ள செய்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவாக இளைஞரணி தோழர் சுப்பிரமணி நன்றியுரை வழங்கினார்.