பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) மாணவர்கள் தாளவாடி, தலைமாலை, ஆசனூர் ஆகிய அடர்ந்த வனப் பகுதிகளில் விழிப்புணர்வுப் பயணம் – பழங்குடியின மக்களுடன் சந்திப்பு தமிழர் தலைவர்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பழங்குடி மக்களுக்காக நடத்தும் மாபெரும் பொது மருத்துவ முகாமை முன்னிட்டு, தஞ்சை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) மாணவ மாணவிகள் இரண்டு நாள் தாளவாடி, தலைமாலை, ஆசனூர் ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண் டனர். இதுவே நமது மாணவர்களின் முதல் பழங்குடி கிராமப்பயணமும், மற்றும் அப்பழங்குடி இன மக்களுடன் உரையாடலும் ஆகும்.
கிராமங்களில்
இதைப் பற்றிய ஒரு பயண விவரிப்பு :
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பழங்குடி மக்க ளுக்காக மாபெரும் பொது மருத்துவ முகாம் நடைபெறும் என அறிவிப்பு செய்தவுடன், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் அறிவுறுத்தல்படி பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் இணைந்து தாளவாடி, தலை மலை மற்றும் ஆசனூர் ஆகிய கிராமங்களில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர். இந்த விழிப்புணர்வு பயணத்தை கோபிசெட்டிப்பாளையம் மாவட்டத்தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பனிடம் கலந்துரையாடிய பொழுது ‘‘நீங்கள் மாணவர்களை அனுப்புங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’’ என்று கூறிவிட்டார் .
விழிப்புணர்வு பயணம்
மாணவ மாணவிகளிடம் பெயர் பதிவு செய்யுமாறு கேட்டபொழுது பல மாணவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். அவர்களில் நாம் 25 மாணவர்களை தேர்வு செய்து பழங்குடியினர் பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. 19 மாணவர்கள்,6 மாணவிகள் மற்றும் 4 பேராசிரியர்கள் 3 வாகனங்களில் விழிப்புணர்வு பயணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, 15-11-2024 அன்று காலை 10.00மணிக்கு தஞ்சையில் இருந்து பயணம் மேற்கொள்ளப்பட்டது. அன்று மாலை கோபிசெட்டிப்பாளையம் எல்லை அடைந்தவுடன் நமது கழக பொறுப்பாளர்கள் வழக்குரைஞர் சிவபாரதி மற்றும் சூர்யா எங்களை வரவேற்று அவர்களும் எங்களுடன் இணைந்து பயணம் மேற்கொண்டனர். மாணவ மாணவி களுக்கு கோபிசெட்டிப்பாளையம் மாவட்டத் தலைவர் சென்னியப்பன் அறிவுறுத்தலின்படி இந்த இரண்டு தோழர் களும் நமது மாணவ மாணவிகளுக்கு வேண்டிய தங்கும் வசதி, உணவு, சிற்றுண்டி என அனைத்தையும் ஏற்பாடு செய்துவிட்டனர். இரவு 7.00 மணிக்கு ஆசனூர் மைராடா தொண்டு நிறுவன விருந்தினர் குடியிருப்பில் நமது மாணவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
கலந்துரையாடல்…
அன்று இரவு நமது மாணவர்கள், பேராசிரியர்கள், திராவிடர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழமை இயக்க தோழர்கள் ரகு, மருதமுத்து மற்றும் சடையப்பன் ஆகியோருடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாணவ மாணவிகளை மூன்று குழுக்களாக பிரித்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. குழு ஒன்றுக்கு தேசிய மாணவர் படை மாணவர் அப்பு அவர்களின் தலைமையில் 6 மாணவர்கள், 2 மாணவிகள், அவர்களுடன் பேராசிரியர் முனைவர் பா இளங்கோவன் , திராவிடர் கழகத்தோழர் வழக்குரைஞர் சூர்யா மற்றும் தோழமை இயக்கத்தோழர் ரகு ஆகியோருடன் இணைந்து தாளவாடி, தலைமலை, நெய்தலபுரம் ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
பஞ்சாயத்திற்குட்பட்ட…
குழு இரண்டில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவி கண்மணி தலைமையில் 7 மாணவ மாணவிகள் அவர் களுடன் பேராசிரியர் முனைவர் சுகுமார், திராவிடர் கழகத் தோழர் வழக்குரைஞர் சிவபாரதி மற்றும் தோழமை இயக்கத்தோழர் சடையப்பன் ஆகியோருடன் இணைந்து திங்களூர் மற்றும் கேர்மாளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமங்களில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது .
குழு மூன்றில் நாட்டுநல பணித்திட்ட மாணவர் முகம்மது இப்ராகிம் அவர்களின் தலைமையில் 7 மாணவ மாணவிகள், பேராசிரியர் செ அனுசுயா பிரியா, பேராசிரியர் கே பன்னீர்செல்வம், தோழமை இயக்க தோழர் மருதமுத்து ஆகியோருடன் இணைந்து புதுக்காடு, பழைய ஆசனூர் மற்றும் அரேபாளையம், ஒங்களுர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமங்களில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது .
குழு 1 பயண விவரம் : குழுத்தலைவர் : மாணவர் அப்பு
குழு உறுப்பினர்கள் : மணிகண்டன், மதன், முகம்மத் பைசல், சவுமித்தா, இம்மானுவேல் , நந்திதா, பொன்ராஜ், மற்றும் விஸ்வா
பேராசிரியர்: முனைவர் பா இளங்கோவன்
திராவிடர் கழக பொறுப்பாளர் : வழக்குரைஞர் சூர்யா
தோழமை இயக்க தோழர்: ரகு
வாகன ஒருங்கிணைப்பு : முத்துராஜ்
பழங்குடியின மக்களுடன் உரையாடி….
குழு 1 – 16.11.2024 அன்று காலை 7.00 மணிக்கு புறப் பட்டு சோளகர் தொட்டி, பாலப்படுகை, கோடப்பள்ளி, அல்லபுரத்தொட்டி, தலைமலை, ராமர் அணை, இட்டரை மற்றும் காளிதிம்பம் ஆகிய கிராம்களில் பயணம் மேற்கொண்டு 300- கும் மேற்பட்ட குடும்பங்களை சந்தித்த மாணவ மாணவிகள் பொது நல மருத்துவ முகாமிற்கான துண்டு வெளியீடுகளை வழங்கி, பழங்குடி இன மக்களுடன் உரையாடி, அவர்களை பொது நல மருத்துவ முகாமிற்கு அழைத்தனர். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, என உரிமையோடு பழங்குடி இன மக்களுடன் மாணவர்கள் உரையாடினார். அவர்கள் அன்போடு கொடுத்த பழங்களை வாங்கி உண்டும் மகிழ்ந்தும் உரையாடினார்கள்.
விலங்கு – மனித மோதல்கள் குறித்த செய்திகளையும் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் அவர்களிடம் கேட்டறிந்தனர். தோழமை இயக்கத்தினர் மற்றும் கிராம பொறுப்பாளர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து பொது நல மருத்துவ முகாமிற்கு அழைத்தனர். இரவு 8.00மணிக்கு பயணத்தை முடித்துக்கொண்டு மைராடா தங்குமிடத்திற்கு திரும்பினர். மறுநாள் காலை 7.00 மணிக்கு புறப்பட்டு காளி திம்பம் கிராமத்திற்கு சென்று அங்குள்ள மலைவாழ் மக்களுடன் உரையாடி பொது மருத்துவ முகாமிற்கு அழைத்தனர்
குழு 2 பயண விவரம் :
குழுத்தலைவர் : மாணவி – கண்மணி
குழு உறுப்பினர்கள் : சக்தி, சுரேந்திர குரு, ஜெயப்ரகாஷ், முகம்மது அர்சத், வேல்முருகன் , மனோஜ், மற்றும் தாரணி
பேராசிரியர்: முனைவர் வே சுகுமார்
திராவிடர் கழக பொறுப்பாளர் : வழக்குரைஞர் சிவபாரதி
தோழமை இயக்க தோழர்: சடையப்பன்
வாகன ஒருங்கிணைப்பு : அருண்
1000க்கு மேற்பட்ட குடும்பங்களை சந்தித்து
குழு 2 – 16.11.2024 அன்று காலை 7.00 மணிக்கு புறப்பட்டு திங்களூர் மந்தைத்தொட்டி, கே பி மாலம், நீர்க்குண்டி, கடாட்டி, பெடர்பாளையம், சிக்கனந்தி, டிபி தொட்டி, பாசக்குட்டை, சஜல்கரை, செல்லுமித்தொட்டி, கொட்டமெலம், வைத்தியநாதபுரம், கேர்மளம், கானகரை, ஜோக்னுர், பூத்தளபுரம், தழுதி, உருளிக்குட்டை, ஒருத்தி, வி,எம் தொட்டி, அரேப்பாலயம் ஆகிய கிராமங்களில் பயணம் மேற்கொண்டு 1௦௦௦கும் மேற்பட்ட குடும்பங்களை சந்தித்த மாணவ மாணவிகள் பொது மருத்துவ முகாமிற்கான துண்டு வெளியீடுகளை வழங்கி பழங்குடி இன மக்களுடன் உரையாடி அவர்களை பொது மருத்துவ முகாமிற்கு அழைத் தனர். தாத்தா, அம்மா, அண்ணன், தங்கை, அக்கா என உரிமையோடு பழங்குடி இன மக்களுடன் மாணவர்கள் உரையாடினர். அவர்கள் அன்போடு கொடுத்த பழங்களை வாங்கி உண்டும் மகிழ்ந்தும் உரையாடினார்கள். விலங்கு மனித மோதல்கள் குறித்த செய்திகளையும், திருவிழாக்களில் நடந்த நிகழ்வுகளையும் மாணவ மாணவிகள் ஆச்சரியத் துடன் அவர்களிடம் கேட்டறிந்தனர். தோழமை இயக் கத்தினர் மற்றும் கிராம பொறுப்பாளர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து பொது மருத்துவ முகாமிற்கு அழைத்தனர். மாலை 7 .00 மணிக்கு பயணத்தை முடித்துக்கொண்டு மைராடா தங்குமிடத்திற்கு திரும்பினர்.
குழு 3 பயண விவரம்
குழுத்தலைவர் : மாணவன் முகமது இப்ராகிம்
குழு உறுப்பினர்கள் : திவ்யலட்சுமி, மேனிகா, தேவப்ரி யன், முகம்மது அஜ்மல் , இனியன், யோகா வீரமணி மற்றும் முகேஷ்.
பேராசிரியர்: முனைவர் செ.அனுசுயா பிரியா நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர் க.பன்னீர் செல்வம், நாட்டு நலப்பணித்திட்ட நிகழ்வு அலுவலர்
தோழமை இயக்க தோழர்: மரூதப்பன்
வாகன ஒருங்கிணைப்பு : ராஜ்குமார்
குழு 3 – 16.11.2024 அன்று காலை 7.00 மணிக்கு புறப்பட்டு
உரிமையோடு உரையாடினர் சோக்கித்தொட்டி, கொட்டடை, உளியாளா, மாவல்லம், குழியடை, புதுக்காடு ஓசுட்டி, கோவில்தொட்டி, ஒங்கல்வாடி, பழைய ஹாசனுர், அரேப்பாலயம் ஆகிய கிராமங்களில் பயணம் மேற்கொண்டு 800-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சந்தித்த மாணவ மாணவிகள், பொது மருத்துவ முகாமிற்கான துண்டு வெளியீடுகளை வழங்கி பழங்குடி இன மக்களுடன் உரையாடி அவர்களை பொது மருத்துவ முகாமிற்கு அழைத்தனர். அனைத்து வகை மக்களுடனும் உரிமையோடு மாணவர்கள் மகிழ்வாக உரையாடினார். அவர்கள் அன்போடு பேசி மகிழ்ந்து உரையாடினார்கள். விலங்குகளுடனான மனித மோதல்கள் குறித்த செய்தி களையும், மரம், செடி, கொடிகளின் பயன்களையும், கல்வி மற்றும் உடல் நிலை குறித்த தகவல்களையும் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் அவர்களிடம் கேட்டறிந்தனர். தோழமை இயக்கத்தினர் மற்றும் கிராம பொறுப்பாளர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து பொது மருத்துவ முகாமிற்கு அழைத்தனர். மாலை 7.00 மணிக்கு பயணத்தை முடித்துக்கொண்டு மைராடா தங்குமிடத்திற்கு திரும்பினர். நிறைவாக அனைத்து தோழமைகளும் அனை வரையும் தஞ்சைக்கு வழி அனுப்பி வைத்தனர். மிக இனிதே பயணம் நிறைவு பெற்றது.
தொகுப்பு :
முனைவர் பா. இளங்கோவன், முனைவர் வெ. சுகுமார், முனைவர் செ. அனுசுயா பிரியா, க. பன்னீர் செல்வம்