நகரங்களில் வெளியே சென்று விளையாடும் வழக்கம் குறைந்து இணைய விளையாட்டில் மக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 60 கோடி பேர் இணைய விளையாட்டுகள் விளையாடுவது தெரிய வந்துள்ளது. இந்த 60 கோடி பேரில் 41% பெண்கள், அதாவது 5இல் 2 பேர் பெண்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில் இதே எண்ணிக்கை 5இல் 1 ஒன்றாக இருந்தது.