‘வாருங்கள் படிப்போம்’ ‘வாருங்கள் படைப்போம்’ ‘ஹாய்… வாங்க கதை கேட்போம்’ ஆகிய தலைப்புகளில் தனித்தனி குழுக்கள் மூலம் அதன் நிறுவனர் முனைவர் கோ.ஒளிவண்ணன் தலைமையில் இதுவரை 600 நிகழ்ச்சிகளை நிகழ்த்தியிருக்கின்றனர். 2025 ஜனவரி 11ஆம் தேதி சென்னையில், இந்த மூன்று குழுக்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் விதமாக ”முப்பெரும் விழா”வாகக் கொண்டாட உள்ளனர். இதற்காக முனைவர் கோ.ஒளிவண்ணன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, அவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். உடன் அபி சங்கரி, பத்மா அமர்நாத், இளங்கோ, சுனிதா ராஜா, அர்ஷா ஆகியோர் இருந்தனர். (பெரியார் திடல், 17.11.2024)