போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு – 6 சாலைகளை விரிவு செய்ய திட்டம்!

2 Min Read

சென்னை, நவ.19- சென் னையில் போக்குவரத்து பிரச் சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 6 முக்கிய சாலைகள் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இது குறித்த திட்ட அறிக்கையை தயார் செய்யுமாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலானது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நகரின் முக்கியமான சாலைகளில் வேலை நேரத்தில் வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது. இதனால், காலை நேரத்தில் அலுவலகம் செல்வோரும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

சென்னையில் மக்களிடையே வாகன பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்வதால் போக்கு வரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேம் பாலங்கள் கட்டுவது.. சாலைகளை அகலப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தான், சென்னை தலைமை செயலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது, சென்னை மாநகராட்சி சாலைகள், மேம்பாலங்கள் மேம்படுத்துவது குறித்து, ஆலோசிக்கப்பட்டது. மேலும், சென்னையிம் மிக முக்கியமான சாலைகளை விரிவுப்படுத்துவது குறித்த திட்ட அறிக்கையை தயார் செய்யுமாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறாராம்.

* காமராஜர் சாலையில் இருந்து வாலாஜா சாலை போக்கு வரத்து சந்திப்பு முதல் கலங்கரை விளக்கம் வரை (3 கி.மீ).

* புதிய ஆவடி சாலையில் எம்.டி.எச்., சாலையில் இருந்து பெரியார் சாலை வரை விரி வாக்கம் செய்யப்பட வேண்டும்.(2கி.மீ),

* சர்தார் பட்டேல் சாலையில் காந்தி மண்டபம் முதல் அண்ணா சாலை சந்திப்பு வரை (2 கி.மீ).

* காந்தி மண்டபம் சாலையில், அண்ணா நுாற்றாண்டு நுாலகம் முதல் கோட்டூர்புரம் பாலம் வரை (200 மீ).

* டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில், சென்னை சிட்டி சென்டர் முதல் காமராஜர் சாலை வரை (800 மீ).

* கிரீன்வேஸ் சாலையில், போர்சோர் எஸ்டேட் முதல் திரு.வி.க., பாலம் வரை உள்ள பேருந்து வழித்தட சாலைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து, உட்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்து வதுடன், புதிய மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உரிய அறிவு ரைகளை வழங்கியுள்ளார்.

சாத்தியக்கூறு ஆய்வுகளுக்கு பிறகு, இந்த சாலைகளை விரிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வாய்புள்ளதாக தெரிகிறது.
எல்லாம் திட்டமிட்டபடி சரியாக நடந்தால், சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் திட்டமாக இது இருக்கும். ஏனெனில் மேற்கூறிய 6 சாலைகளும் சென்னையின் மிக முக்கியமான சாலைகள் ஆகும். இவற்றை விரிவுபடுத்தும் பட்சத்தில் நெரிசல் பெருமளவு குறையும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *