இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மணிப்பூரில் இரு சமூகங்களை பற்றி எரிய வைப்பது மோடி ஆட்சி! : சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு!

அரசியல்

மதுரை, ஜூலை 26 – இரு சமூகங்களை பற்றி எரிய வைப்பதுதான் மோ டி ஆட்சி. மணிப்பூர் சம்ப வத்தால் இந்திய இறை யாண்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சீதா ராம் யெச்சூரி தெரிவித்து உள்ளார். மதுரை, முனிச் சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் மாநில உரிமை பாது காப்பு மாநாடு 23ஆம் தேதி நடந்த து. 

மாநாட்டில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச்செயலா ளர் சீதாராம் யெச்சூரி பேசியதாவது:-

இந்திய கூட்டாட்சி மிகப்பெரிய தாக்குதலில் சிக்கியுள்ளது என்பதை மணிப்பூர் சம்பவம் காட்டுகிறது. நாட்டில் வேற்றுமையில் ஒற்றுமை, எல்லோருக்கும் சம உரிமை என்பதே கூட் டாட்சியாக உள்ளது. ஆனால், இரட்டை இன் ஜினாக உள்ள மோடி ஆட்சி இரு சமூகங்களை நேருக்கு நேர் நிறுத்தி பற்றி எரியச்செய்யும் வகை யில் செயல்படுகிறது. இந்தியாவின் இறை யாண்மைக்கு ஆபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

நாட்டில் பழங்குடி மக்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பெண்களும் தாக்குதலுக்கு உள்ளா காத நாட்களே இல்லை. ஒரே நாடு, ஒரே ஆட்சி, ஒரே வரி, ஒரே மொழி, ஒரே அரசு, ஒரே தலைவர் என்பதை நம் மீது திணிக்க முயற்சிக்கின்ற னர். மாநிலங்கள் இல்லா மல் இந்தியா கிடையாது. ஆனால் அந்த உணர் வின்றி மோடி அரசு செயல்பட்டு வருகிறது. ஆளுநர்கள் என்ற பெய ரில் பா.ஜ.க. வின் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துகின் றனர். தற்போது ஒன்றிய அரசு பொதுப்பட்டி யலை கடந்து, மாநில பட் டியலில் உள்ள துறை களை கைப்பற்ற தன்னிச்சை நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. மாநி லங்கள் மீது அப்பட்ட மான நிதி அதிகார மீறல் களை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. 

-இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *