கைபேசியில் கவனத்தை செலுத்தியபடியே தண்டவாளத்தை கடந்த மாணவர்கள் ரயிலில் அடிபட்டு பரிதாப மரணம்
வாழப்பாடி, நவ.18- அலைபேசி, இன்றைய தலைமுறையின் வாழ்வில் முக்கிய அங்கமாக மாறி விட்டது. உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் என்ற வரிசையில் அடுத்த இடத்தை அலைபேசி பிடித்து விட்டது என்றால் மிகையில்லை.
அலைபேசி
இளம் தலைமுறையினரின் கையில் இருக்கும் கூரிய கத்திதான் இந்த அலைபேசி. இதை சரியாக பயன்ப டுத்தினால் சாதிக்கலாம். வரம்பு மீறி வீணாக, விளையாட்டாக பயன்படுத்தினால் நம் உயிரையே பறிக்கும் நவீன எமனாகவே இந்த அலைபேசி மாறிவிடும் என்பதற்கு சான்றாக சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே நேற்று (17.11.2024) காலையில் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. என்ன அந்த நிகழ்வு என்று கேட்டால் மனம் கலங்கித்தான் போகிறது.
புத்திர கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் தினேஷ் (வயது 16). இவரும், அதே பகுதியை சேர்ந்த ரவிக்கு மார் மகன் அரவிந்த் குமார் (16) என்பவரும் நண்பர்கள். இருவரும் ஏத்தாப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தனர்.
ரயிலில் அடிபட்டனர்
நேற்று விடுமுறையில் பொழுதை கழிக்க தனது பள்ளி நண்பரான அரவிந்த் குமாரை அழைத்துக்கொண்டு இருவரும் அந்த பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஜோடியாக நடந்து சென்றனர். அலைபேசியில் இணைய விளையாட்டு விளையாடியபடி நடந்து சென்ற அவர்கள் இருவரும் அடுத்த சில வினாடிகளில் பேராபத்து நிகழ உள்ளதை அறியாமல் அலைபேசியில் மூழ்கிய படி நடந்தனர்.
அப்போது அந்த வழியாக சேலத்தில் இருந்து விருத்தாசலம் செல்லும் பயணிகள் ரயில் வந்தது. முன்னால் 2 சிறுவர்கள் தண்டவாளத்தில் நடந்து செல்லும் நிலையில் கண நேரத்தில் ரயிலில் அடிபட்டு 2 மாணவர்களும் படுகாயம் அடைந்தனர். ரத்த வெள் ளத்தில் துடிதுடித்த மாணவர் தினேஷ் நிகழ்வு இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் அரவிந்த் குமார் படுகாயத்துடன் அபயக்குரல் எழுப்பியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
பலி
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் மாணவர் ரயிலில் அடிபட்டு உயிருக்கு போராடுவதை பார்த்து உடனடியாக சேலம் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் படுகாயமடைந்த அரவிந்த் குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் அலைபேசி விளையாட்டில் மூழ்கிய மாணவர்கள் பலியான நிகழ்வு அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள தண்டவாளம் என்பதால் தங்களுக்கு பின்னால் வந்தது ரயிலா? பேருந்தா? என்பதைக்கூடயூகிக்கமுடியாதஅளவுக்கு இருவரது கவனமும் அலைபேசியிலேயே இருந்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.