மணிப்பூர் பி.ஜே.பி. ஆட்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமை!
மாநில அரசே ராஜினாமா செய்! பிரதமரே நாடாளுமன்றத்தில் பதில் சொல்க!!
ஓங்கட்டும்! ஓங்கட்டும்!! பெண்ணுரிமைப் புரட்சி ஓங்கட்டும்!!!
வெடிக்கட்டும்! வெடிக்கட்டும்!! பெண்கள் கிளர்ச்சி வெடிக்கட்டும்!!!
சென்னை, ஜூலை 26 மணிப்பூரில் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன் கொடுமையைக் கண்டித்தும், இன, மத மோதலைத் தூண்டிவிடும் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்தும் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் இன்று (26.7.2023) 11 மணிக்கு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூரில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும், அங்கு கடந்த மூன்று மாதங்களாக மக்கள் வேட்டையாடப்பட்டும், ஒன்றிய அரசோ, மாநில அரசோ பாராமுகம் மட்டு மல்லாமல், துணைபோகும் நிலையைக் கண்டித்தும், திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை சார்பில் பெருந்திரளான மகளிர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட் டம் இன்று (26.7.2023) முற்பகல் சென்னையில் நடைபெற்றது.
மணிப்பூரில் மைதேயி – குகி சமூகத்தவர்களிடை யேயான மோதலால் விளைந்த வன்முறை, கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகத் தொடர்வது வேதனைக்குரியது. பெண்கள்மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமை களும் பல நாள்களுக்குப் பின்னர் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.
மணிப்பூரில் சமவெளியில் வாழும் மைதேயி சமூகத் தினருக்குப் பட்டியல் பழங்குடியினர் தகுதி வழங்கு வதற்கு ஆதரவாக அம்மாநில உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு, அம்மாநிலத்தின் மலைவாழ் பழங்குடி சமூக மான குகி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடந்த மே மாதம் 3 ஆம் தேதியன்று தொடங்கிய மோதலில் நூற் றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக் கணக்கானோர் காயமடைந்தனர், வீடுகளை இழந்துள் ளனர்.
பெரும்பான்மை மக்களாக இருக்கக் கூடிய மைதேயி சமூகத்தைச் சார்ந்தவர்கள் சிறுபான்மையாக இருக்கக் கூடிய பழங்குடியினரை வீடு புகுந்து தாக்கியும், படு கொலை செய்தும், வீடுகளை இடித்தும், தீ வைத்தும் கோரதாண்டவம் ஆடியுள்ளனர்.
இந்த மணிப்பூர் கலவரம் உலக அரங்கில் இந்தி யாவைத் தலைக்குனிய செய்துவிட்டது. வன்முறையாளர் கள் எந்த அளவுக்குச் சென்றுள்ளனர் என்பதற்கு 19.7.2023 அன்று வெளிவந்த வீடியோ காட்சி நாட்டையே உலுக்கிவிட்டது.
மணிப்பூரில் வெறிபிடித்த ஒரு கும்பலால் பழங்குடி யினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடு மைக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வின் காட்சிகளே அவ்வீடியோ காட்சியில் இடம்பெற்றிருந்தன.
பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் காலிகளிடம் எங்களைப் பிடித்துக் கொடுத்தவர்களே காவல்துறை யினர்தான் என்று கண்ணீரும், கம்பலையுமாகக் கூறி யிருப்பதும் நம் உயிர் ஓட்டத்தையே உறைய வைக்கிறது.
”நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா அல்லது காட்டுமிராண்டி விலங்குகள் உலவும் காட்டில்தான் வாழ்கிறோமா” என்ற வினாவை இந்திய மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் நடக்கும் நிகழ்வுகள் பட்டவர்த் தனமாகத் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்று மாதங்களாக அம்மாநிலத்தில் சிறு பான்மை பழங்குடி மக்கள் குறி வைத்துத் தாக்கப்படு கின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பி.ஜே.பி. ஆட்சி இதற்குத் தூண்டுகோலாகவும், துணைபோவ தாகவும் இருக்கிறது என்று பாதிக்கப்பட்ட மக்களும், அனைத்துக் கட்சியினரும் ஒரே குரலில் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த ஒன்பது ஆண்டுகாலமாக ஒன்றிய பி.ஜே.பி. அரசின் ஆட்சியில் சிறுபான்மை சமூக மக்களும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரான ஒடுக்கப்பட்ட மக் களும் படும் அவதிக்கும், உயிர்ப் பலிக்கும் அளவேயில்லை.
”நெஞ்சம் பொறுப்பதில்லையே” என்னும் நிலையில், ”இனியும் ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சி தொடர – மீண்டும் அதிகாரத்தில் அமர கிஞ்சிற்றும் உரிமை இல்லை – தகுதியில்லை” என்பதே இந்திய மக்களின் எண்ண ஓட்டமாக உள்ளது.
”நாகரிகமும், மனித உரிமையும், ஜனநாயகமும், மதச்சார்பின்மையும், சமூகநீதியும் உயிர்ப் பிழைக்க ”இந்திய” மக்களே ஒரே குரலில் எழுவீர்! வாக்குச் சீட்டால் பாசிசத்திற்கு மரணவோலை எழுதுவீர்! எழுதுவீர்!!” என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 21.7.2023 அன்று அறிக்கை விடுத்திருந்தார்.
அதற்கேற்ப இன்று (26.7.2023) காலை 11 மணியளவில் சென்னை எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறையின் சார்பில், மணிப் பூரில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை களைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி தலைமையில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணி யம்மை வரவேற்புரையாற்றினார்.
திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி ஆர்ப்பாட்டத் தொடக்கவுரையாற்றினார். திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, திராவிட முன்னேற்றக் கழக மகளிரணி, மாநில சமூக வலைதள பொறுப்பாளர் மருத்துவர் ப.மீ.யாழினி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், உழைக்கும் பெண்கள் அமைப்பின் தேசிய கன்வீனர் தோழர் வகிதா நிஜாம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் தோழர் வி.தனலட்சுமி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் கொள்கை பரப்புச் செயலாளர் தோழர் உமா ஆகியோர் ஆர்ப்பாட்ட கண்டன உரை நிகழ்த்தினர். திராவிடர் கழக மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி இணைப்புரை வழங்கினார்.
முன்னதாக இவ்வார்ப்பாட்டத்திற்கு பசும்பொன், சி.வெற்றிச்செல்வி, பூவை.செல்வி, பண்பொளி, நூர்ஜஹான், வளர்மதி, மு.ராணி, விஜயலட்சுமி, யுவராணி, அஜந்தா, மு.பவானி, பொன்னேரி செல்வி, உத்ரா பழனிச் சாமி, அருணா பத்மாசூரன், சுகந்தி, நதியா, இளையராணி, லலிதா, க.சுமதி, த.மரகதமணி, அன்புச்செல்வி, தலைமைக் கழக அமைப்பாளர்கள் தே.செ.கோபால், வி.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிறைவாக திராவிடர் கழக மகளிரணியின் தாம்பரம் மாவட்டத் தலைவர் இறைவி நன்றி கூறினார்.
இவ்வார்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தையன், மோகன்ராஜ், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் ஆனந்தன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மணிப்பூரில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து திராவிடர் கழக மகளிர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொறுப்பாளர்கள் ஒலிமுழக்கம்! (சென்னை, 26.7.2023)
மணிப்பூரின் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை நடத்தும் ஆர்ப்பாட்ட முழக்கங்கள்! (26.7.2023 சென்னை)
ஒழிக ஒழிக ஒழிகவே
ஒடுக்குமுறைகள் ஒழிகவே!
எந்தப் போர்கள் என்றாலும்
எங்கே கலவரம் நடந்தாலும்
முதற்பலி எல்லாம் பெண்களா?
அன்று அங்கே ஈழத்தில்
நேற்று மோடியின் குஜராத்தில்
இன்று இங்கே மணிப்பூரில்
எங்கு வன்முறைகள் நடந்தாலும்
பெண்கள் தான் இலக்குகளா?
பற்றி எரியது பற்றி எரியது!
மணிப்பூர் மாநிலம் பற்றி எரியுது!
நெஞ்சம் பதறுது நெஞ்சம் பதறுது
பழங்குடி மக்களைப் படுகொலை செய்வதும்
கூட்டுப் பாலியல் வன்முறை நிகழ்வதும்
கொடுமைகள் கேட்டு நெஞ்சம் பதறுது
காவல்துறையின் ஆயுதங்கள்
வன்முறையாளர் கரங்களிலா?
பாஜகவின் அரசு எந்திரம்
வன்முறையாளருக்குப் பாதுகாப்பா?
டபுள் என்ஜின் பாஜகவின்
மாநில அரசின் மக்களைக் கொல்லுது
ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்குது
இந்திய அரசே வெட்கம் வெட்கம்!
மகளிரைக் காக்கத் தவறுகின்ற
இந்திய அரசே வெட்கம் வெட்கம்!
களையப்பட்டவை ஆடைகளல்ல
இந்திய மக்களின் இறையாண்மை!
‘பேட்டி’ ‘பச்சாவ்’ என்பதெல்லாம்
மோடி மஸ்தான் வெறும்பேச்சா?
பா.ஜ.க. ஆளும் மணிப்பூரில்
மோடி சாயம் வெளுத்தாச்சா?
ஒன்றிய அரசே! ஒன்றிய அரசே!
மவுனம் ஏன்? மவுனம் ஏன்?
பதில் சொல்! பதில் சொல்!
நாடாளுமன்றத்தில் பதில் சொல்!
பதவி விலகு பதவி விலகு
மணிப்பூர் கலவரத்தை வேடிக்கை பார்க்கும்
ஒன்றிய அரசே பதவி விலகு!
மக்களைக் காக்கத் தவறுகின்ற
ஒன்றிய அரசே பதவி விலகு!
மகளிரைக் காக்கத் தவறுகின்ற
ஒன்றிய அரசே பதவி விலகு!
கொடுமை கொடுமை மணிப்பூர் கொடுமை
வேடிக்கை பார்ப்பது அதனினும் கொடுமை!
வீதிக்கு வாரீர் மகளிரே!
வீதிக்கு வாரீர் மாணவரே!
குஜராத் மணிப்பூர் மாதிரிகள்
நாடு முழுவதும் நடக்காமல்
தடுக்க வாரீர் இளைஞர்களே!
ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வின்
ஆட்சி இங்கே யாருக்கு?
ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பறிப்பு
பிற்படுத்தப்பட்டோர்க்கு வாய்ப்பு மறுப்பு
பழங்குடி மக்களின் வாழ்க்கை அழிப்பு
சிறுபான்மையோரின் உரிமை அழிப்பு
ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வின்
ஆட்சி இங்கே யாருக்கு?
பார்ப்பன பனியா ஆதிக்கத்துக்கு
சனாதனக் கூட்டத்துக்கு
சங்கிகளின் கொட்டத்துக்கு!
தூக்கியெறிவோம் தூக்கியெறிவோம்!
ஒன்றிய பா,ஜ,க,அரசினையே
ஜனநாயக வழியில் தூக்கியெறிவோம்!
ஓங்கட்டும்! ஓங்கட்டும்!
மகளிர் உரிமை ஓங்கட்டும்!
திராவிடர் கழக மகளிரணி மற்றும்
திராவிட மகளிர் பாசறை