மயிலம் பாமக சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், திமுக அரசை பாராட்டி பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. எளிய மக்கள் பயன்பெறும் வகையில், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகைக்கடன் ரத்து, நான் முதல்வன், புதுமைப் பெண், காலை சிற்றுண்டி உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்த முதலமைச்சருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். எதிரணியில் இருக்கும் பாமகவே, ஆட்சியை பாராட்டுவதாக திமுகவினர் பெருமிதம் அடைந்துள்ளனர்.