நாகர்கோவில், நவ.17- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகக் கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பி ரமணியம் தலைமை தாங்கி உரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்து தொடக்கவுரையாற்றினார். மாவட்ட கழகத் துணைத்தலைவர் ச.நல்லபெருமாள் மாநகர கழக செயலாளர் மு.இராஜசேகர், மாவட்ட கழகக் காப்பாளர் ஞா.பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கழக இளைஞரணி தலைவர் எஸ்.அலெக்சாண்டர், இளைஞரணி துணை அமைப்பாளர் சந்தோஷ்குமார், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட கழக துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன், தோழர்கள் பா.சு.முத்துவைரவன் மு.குமரிச்செல்வர், மருத்துவர் கலைச்செல்வன், புத்தேரி பிரசாந்த், ம.செல்வராசு, அழகனாபுரம் சிதம்பரம், எ.ச.காந்தி, வினோத், அஜித், இரா.முகிலன், தாழக்குடி செல்லப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நவம்பர் 26 அன்று ஈரோட்டில் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் தோழர்கள் குடும்பத்தோடு பங்கேற்பது எனவும், தந்தை பெரியாரை உலகமயமாக்க ஓயாது உழைத்துக்கொண்டிருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய 92 ஆவது பிறந்த நாளை கிளைக்கழகங்கள் தோறும் கொள்கைப் பெருவிழாவாகக் கொண்டாடுவது, சென்னையில் டிசம்பர் 2 அன்று நடைபெறும் விழாவில் குமரி மாவட்ட தோழர்கள் குடும்பத்துடன் பங்கேற்று பெரியார் உலகத்திற்கு நிதி வழங்குவது எனவும் சங்கான்கடையில் தமிழர் தலைவரின் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் சொற்பொழிவாளர் நர்மதாவை அழைத்து நடத்துவது எனவும்,
செண்பகராமன்புதூரில் பெரியாரியல் பயிற்சி பட்டறையை சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட கழகத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், பயிற்சி அளித்த ஆசிரியர் பெருமக்கள் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்ற தோழர்கள் ச.நல்லபெருமாள், சி.அய்சக் நியூட்டன் ம.தயாளன், சு.இந்திராமணி, ச.ச.மணிமேகலை மற்றும் தோழர்களுக்கும் நன்றி தெரிவிப்பது, திருச்சி சிறுகனூரில் 155அடி உயர்ந்த பெரியார் சிலை, பெரியார் உலகத்திற்கு நன்கொடையைத் திரட்டித் தருவது உள்ளிட்ட சிறப்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குற்றாலம் பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்கள், புதிய இளைஞர்கள் பங்கு பெற்றனர். ‘‘டிசம்பர் -2 இல் சென்னையில் நடைபெறும் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களின் 92 ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பெரியார் உலகத்திற்கு நிதியளிக்கும் நிகழ்ச்சிக்கு எங்களால் வர இயலாது; இயன்றதைத் தருகிறோம் மானமிகு ஆசிரியர் அவர்களிடம் கொடுத்துவிடுங்கள்’’ என அய்ந்து தோழர்கள் உணர்ச்சிகரமாக மாவட்டத்தலைவர் மாவட்டச் செயலாளரிடம் நிதி அளித்தனர்.
செண்பகராமன்புதூரில் பெரியாரியல் பயிற்சிப்பட்டறையை சிறப்பாக நடத்தித்தந்த மாவட்டத்தலைவர், மாவட்ட செயலாளர், ஜாதி மறுப்பு இணையேற்ற பிரசாந்த் ஆகியோருக்குப் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.