இன்ஃப்ளூயன்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் சுவாச நோய்களில் 75% பாதிப்புகளுக்கு காரணமாகின்றன. இன்ஃப்ளூ யன்சா ஏ மட்டுமே 44% நோய்களுக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. சார்ஸ்-கோவ்-2 பரவல் மிகக் குறைந்த அளவில் உள்ளது என அறிக்கை தெரிவிக்கிறது.
மாநில பொது சுகாதார ஆய்வகம் (SPHL), 38 மாவட்டங்களில் இருந்து இன்ஃ ப்ளூயன்சா போன்ற நோய் (ILI) உள்ள 326 நோயாளிகளின் சுவாச மாதிரிகளை பரிசோதித்ததில், இன்ஃப்ளூயன்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் சமூகத்தில் அதிகம் பரவி, மாநிலத்தில் குழந்தைகள் மற்றும் பெரிய வர்களிடையே 75.4% சுவாச நோய்களை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இன்ஃப்ளூயன்சா வைரஸ் களில், இன்ஃப்ளூ யன்சா ஏ (H1N1) மட்டுமே 44% நோய்களுக்கு காரணமாக உள்ளது. சுவாச சின்சிடியல் வைரஸ் (RSV) ஏ மற்றும் பி வகைகளும் ILI நோய்களில் பொதுவாக (9%) காணப்பட்டன. இவை லேசான நோயை ஏற்படுத்தின. சார்ஸ்-கோவ்-2 (கோவிட்-19) பரவல் மிகக் குறைந்த அளவில் உள்ளது. பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவ இயக்குனரகம் (DPH), தமிழ்நாட்டில் காய்ச்சல் மற்றும் ஃப்ளூ போன்ற நோய்கள் குறித்த அறிக்கையில், மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் காய்ச்சல் அதிகரிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம்-ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளத்தின் தரவுகளின்படி, கோடை காலத்தில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) நோய்கள் குறைந்து, மழைக்காலத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, தொற்று நோய் பரப்பும் இன்ஃப்ளூயன்சா ஏ (H1N1) வைரஸ் வரும் ஆண்டுகளிலும் பருவகால இன்ஃப்ளூயன்சாவாக தொடர்ந்து பரவும். எனவே பதற்றம் அடைய தேவையில்லை. தற்போதைய சூழ்நிலையில், பரவும் வைரஸ்/நோய்க்கிருமிகள் லேசான நோயையே ஏற்படுத்து கின்றன.