பீகாரில் பிஜேபி ஆட்சியில் துப்பாக்கிக் கலாச்சாரம்

1 Min Read

புதுடில்லி, நவ.17 வட மாநிலங்களில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளவர்கள், மற்றும் கவுரவத்துக்காக பலர் அரசிடம் அனுமதி பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர். ஒருவேளை துப்பாக்கிச் சூடு நடந்தால், எந்தச் சூழ்நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்தது. எத்தனை குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்று அவர்கள் அரசுக்கு கணக்கு காட்ட வேண்டும்.

துப்பாக்கிக்கான உரிமங்களை ஆட்சியர்கள் அளிக்கின்றனர். உரிமம் பெற்றவர்கள் இறந்து விட்டால் அதை அவர்களது வாரிசுகளில் ஒருவருக்கு மாற்றிக் கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. அல்லது அவரது வாரிசுகள் துப்பாக்கியை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். பழைய துப்பாக்கிக்கான ஒரு தொகையை அவர்களது வாரிசுகளுக்கு அரசு கொடுத்து விடுகிறது.

ஆனால், பீகாரில் இறந்தவர்களில் பலருடைய உரிமம் மற்றும் துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைக்காமல் அவற்றை குற்றச்செயல் புரியும் நபர்களுக்கு விற்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் மட்டும் 3,200 துப்பாக்கி உரிமங்கள் பெற்றவர்கள் இறந்துள்ளனர். அவற்றில் ஒன்று கூடஅரசிடம் திரும்ப ஒப்படைக்கப் படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிகளில் சில சமீபத்தில் பீகாரில் கைதான குற்றவாளிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இதையடுத்து பீகார் காவல் துறை தலைமையகம் சார்பில் அனைத்து காவல்நிலையங்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில், ‘‘இறந் தவர்கள் வைத்திருந்த உரிமங்களுட னான துப்பாக்கிகளின் நிலை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘பீகார் காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘இறந்துபோனவர்கள் வைத்திருந்த துப்பாக்கி உரிமங்கள் மூலம், குண்டுகளும் எளிதாகக் கிடைத்து விடுகின்றன. இதன்காரணமாக, இந்த வகை துப்பாக்கிகளுக்கு அதிக தொகை கிடைத்து விடுகிறது. போலி உரிமங்களை விற்பதும் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது’’ என்று தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *