சென்னை, நவ.17- பேரூரில் ரூ.4 ஆயி ரத்து 276 கோடி செலவில் கடல்நீரை, குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் மூலம் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் குடிநீரை பெற முடியும்.
சென்னை பெருநகர மக்களுக்கான குடிநீர் பூண்டி, சோழ வரம், புழலேரி, கண் ணன்கோட்டை தேர் வாய் கண்டிகை, செம் பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எதிர்கால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சென்னை குடிநீர் வாரியம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த அடிப்படையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பேரூரில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.4 ஆயிரத்து 276 கோடியே 44 லட்சம் செலவில் செயல் படுத்தப்படுகிறது. அங்கு நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் குடி நீரை சுத்திகரித்து பெற முடி யும். இந்ததிட்டத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 21ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதன் பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகிறது.
அங்கு கடல் நீரை உட்கொள்ளும் கட் டமைப்பு, செதில டுக்கு தொட்டி, சவ் வூடு வெளியேற்றும் தெளிந்த நீர் தொட்டி, நடு நிலைபடுத்தும் தொட்டி, நீர் சேகரிப்பு தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட நீர் சேகரிப்பு தொட்டி, கசடுகளை கெட்டிப்படுத்தும் தொட்டி, நிர்வாகக் கட்டடம், பண்டக சாலை மற்றும் தொழிற் கூடங்களுக்கான கட்டு மானப் பணிகள் துரித மாக நடந்து வருகிறது.
கடல்நீரை குடிநீராக்க 1,150 மீட்டர் நீளத்திற்கு கடலுக்குள் குழாய்கள் பதிக்கப்படும். மேலும், இங்கு அமைக்கப்படும் நீர் கரைந்த காற்று அலகுகள் மற்றும் இரட்டை ஈர்ப்பு மணல் வடிகட்டி அலகுகள் ஆகியவை மற்ற வழக்கமான நிலையங்களை விட நவீன முறையில் வடிவமைக்கப ்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் இருந்து சுமார் 59 கி.மீ. நீளத்திற்கு குடிநீர் குழாய் பதிக் கப்படும். இந்த திட் டத்தின் மூலம், பெரு நகர சென்னை மாநக ராட்சிக்குட்பட்ட பகுதிகள், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் 20 ஊராட்சிப் பகுதிகளில் உள்ள 22 லட்சத்து 67 ஆயிரம் மக்கள் பயனடைவார்கள். இந்த நிலையத்தில் கட்டுமானப் பணி ஆய்வின் போது தலைமை பொறியாளர் சுகந்தி, மேற்பார்வை பொறியாளர் சாந்தி, செயற்பொறியாளர் கிருபாகரவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.