திருமண வயதை எட்டாத மனைவியுடனான உடலுறவு – ‘பாலியல் வன்கொடுமையே’ மும்பை உயா்நீதிமன்றம்

2 Min Read

புதுடில்லி, நவ.17 திருமண வயதைப் பூா்த்தி செய்யாத மனைவியுடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமையே என்று குறிப்பிட்ட மும்பை உயா்நீதிமன்றம், சிறுமியின் கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.
மகாராட்டிர மாநிலம் நாகபுரியைச் சோ்ந்த நபா், கடந்த 2019-ஆம் ஆண்டு சிறுமி ஒருவரை அவரின் விருப்பத்தை மீறி தொடா்ந்து பாலி யல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதில் அந்தச் சிறுமி கா்ப்பமடைந்த நிலையில், அவரைத் திருமணம் செய்துள்ளார். கருவை கலைக்குமாறும் சிறுமியை வற்புறுத்தியுள்ளார். அதற்கு சிறுமி மறுத்துள்ளார். இந்த நிலையில், அந்தச் சிறுமிக்கு ஆண் குழந்தைப் பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பிறகும், அந்த நபா் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதைத் தொடா்ந்து, அந்த நபா் மீது சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், பெயரளவில் தன்னை திருமணம் செய்து கொண்ட அந்த நபா், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தொடா் பாலியல் வன் கொடுமை செய்வதாகவும் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப் படையில் அந்த நபா் மீது காவல்துறையினர் போக்சோ (குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம்) சட்டத் தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை கடந்த 2021-ஆம் ஆண்டு விசாரித்த விசாரணை நீதிமன்றம் அந்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. இதை எதிர்த்து அந்த நபா் தரப்பில் மும்பை உயா்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, மும்பை உயா்நீதி மன்ற நாகபுரி அமா்வு நீதிபதி ஜி.ஏ.சனாப் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘சிறுமி மனுதாரரின் மனைவி என்பதால், அவருடனான உடலுறவை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது. மேலும், இந்த விவகாரம் நடைபெற்ற 2019-ஆம் ஆண்டில் அந்தச் சிறுமி 18 வயதை பூா்த்தி செய்துவிட்டார்’ என்று வாதிட்டார்.

இதை ஏற்க மறுத்து நீதிபதி, ‘ஆவண ஆதா ரங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட சிறுமி 2002-ஆம் ஆண்டு பிறந்துள்ளார். எனவே, நிகழ்வு நடைபெற்ற 2019-ஆம் ஆண்டில் அவா் 18 வயதைப் பூா்த்தி செய்யவில்லை. எனவே, சிறுமி மனைவியாக இருந் தாலும், அவருடனான உடலுறவு பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும். அதுமட்டு மின்றி, சிறுமியின் சம் மதமின்றி அந்த நபா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். எனவே, இது பாலியல் வன்கொடுமை குற்றமே என்று குறிப்பிட்டு, அந்த நபருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறைத் தண் டனையை உறுதி செய்து உத்தரவிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *