பார்ப்பனர்களை கண்டித்து விட்டால், பார்ப்பன நடத்தைகளுக்கு எதிராக அவர்கள் பரப்பும் மூட நம்பிக்கைகளை பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தினால், அவர்கள் ஆக்கிரமித்திருக்கும் கோவில் கருவறையில் இருந்து வெளியேறச் செய்தால் பெரும் கோபத்துக்கு ஆளாகி விடுகின்றனர்.
ஏதோ திராவிடர் கழகம்தான் கோவில் கணக்கு வழக்குகளை பார்க்கச் செய்தது போலவும் திராவிடர் கழகம்தான் பார்ப்பனர்களுடைய நடத்தைகளையும் செயல்களையும் கேலியும் கிண்டலும் செய்வது போல கருதிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
இதோ பல ஆயிரம் ஆண்டுகளாக பார்ப்பன இந்துத்துவா பண்பாட்டின் நிலை:
கபாலின்: “ஆமாம். அதோ அந்தக் கள்ளுக்கடையை பார்! அது யாக சாலையை போன்று எவ்வளவு அழகாக காணப்படுகிறது. கடையின் பெயரை தாங்கி நிற்கும் கம்பம் யாகசாலையில் உள்ள யூபஸ்தம்பம் போல காணப்படுகின்றது. கள் குடிப்போர் யாகசாலையில் உள்ள பிராமணர்போல காணப்படுகிறார்கள். கள் கலயங்கள் சோமப் பானத்தை வைக்கும் பாத்திரங்கள்போல் இருக்கின்றன. அங்கு விற்கப்படும் சுவை உள்ள மாமிசங்கள் யாகத்தில் இடப்படும் ஆகுதி போலக் காணப்படுகின்றன. குடிகாரர்களின் வெறிப்பேச்சு யஜுர் வேதத்தில் யஜுசைப் போல் இருக்கிறது. அவர்கள் பாடும் பாட்டுக்கள் சாமகானத்தை ஒத்திருக்கின்றன. கள்ளை முகர்ந்து எடுக்கும் அகப்பை தீயில் நெய் சொரியும் கரண்டி (தர்வி) போல இருக்கிறது. குடி வேட்கையே யாகாக்கினி போலும். கள்ளுக்கடைக்காரன் யாகத்தை நடத்தும் எஜமானன் போல காணப்படுகிறான்.”
கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆட்சி செய்த மகேந்திரவர்மப் பல்லவன் எழுதிய “மத்த விலாச பிரஹசனம்” என்ற நாடக நூலில் வரும் உரையாடல் இது. இந்நூல் சமஸ்கிருதத்தையும் பிராகிருத மொழியையும் கலந்த நடையில் உள்ளது. இந்நூல் சமஸ்கிருதத்தில் 1971இல் வெளி யிடப்பட்டது.
(ஆதாரம்: தமிழில் – மகேந்திரவர்மன் (1959), மயிலை சீனி வெங்கடசாமி)
ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில், இம்மன்னனின் சிறிய தந்தையின் மகன் உத்தமசோழன் கண்டராதித்தன் கோயில்களை கண்காணித்து அவற்றில் தவறிழைத்தவர்களை கண்டித்து நல்ல நிலையில் பாதுகாத்து வந்தான்.
அதேபோல் அதிராஜேந்திர சோழன் காலத்திலும் இம்மன்னனின் அரசு அதிகாரி ராஜேந்திர மூவேந்த வேளான் என்பவன் காஞ்சிபுரத்திலிருந்து திருக்காரைக்காடு வரை உள்ள ஊர்களின் கோவில் கணக்கு களை ஆய்ந்தனன் என்று காஞ்சி கல் வெட்டு கூறுகின்றது.
வரலாறு இப்படி இருக்க திராவிடர் கழகத்தின் மீது ஆத்திரம் கொண்டு என்ன பயன்??
– பெரியார் குயில், தாராபுரம்