உரத்தநாடு, ஜூலை 27 வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் உரத்தநாட்டில் பேருந்து நிலையம் மற்றும் தெற்கு முஸ்லீம் தெரு பகுதிகளில் 25.7.2023 மாலை நடை பெற்றது.
நகர திராவிடர் கழக செயலாளர் ரெ.ரஞ்சித்குமார் அனைவரையும் வரவேற்றார்,
ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் பு.செந்தில்குமார் தலைமையிலும், மாவட்ட செயலாளர் அருணகிரி, ஒன்றிய திராவிடர் கழக தலைவர் த.ஜெகநாதன், ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் மாநல் பரமசிவம், ஒன்றிய விவசாய அணி தலைவர் மா.மதியழகன், மாவட்ட வழக்குரைஞர் அணி செயலாளர் வழக்குரைஞர் க.மாரிமுத்து ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது.
தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை.க.குருசாமி தொடக்கவுரையாற்ற, கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா.இராமகிருஷ்ணன், கிழக்கு ஒன்றிய தி. மு. க செயலாளர் ஜெ. கார்த்திகேயன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் கமலக்கண்ணன், தெலுங்கன்குடிக்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ்,ஜான்பீட்டர், ஒன்றிய திராவிடர் கழக விவசாய அணி செயலாளர் அறிவரசு, தி.மு.க. நிர்வாகிகள் காமராஜ், புவனராஜ், தஞ்சை வழக்குரைஞர் சங்க மாவட்ட பொருளாளர் தவ.ஆறுமுகம், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், பாளமுத்தூர்குடிக்காடு மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் சிட்டிபாபு, பேய்க்கரும்பன் கோட்டை ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயராமன்,கு. மணியன், மண்டலக்கோட்டை மு.ஒன்றியக் குழு உறுப்பினர் ரவிச் சந்திரன், ஒக்கநாடு மேலையூர் பொறியாளர் ப.பால கிருஷ்ணன், மா.தென்னகம், நா.வீரத்தமிழன்,வெ. சக்திவேல், செ.சாமிநாதன், வன்னிப்பட்டு செந்தில், புதுவளவு மெய் யழகன், மண்டலக்கோட்டை செந்தில்குமார், பேராசிரியர் இரா.குட்டிமணி, கண்ணை கிழக்கு திருநாவுக்கரசு உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.