எங்களுக்கு முன்னால் உட்கார உனக்கு துணிச்சல் வந்தது எப்படி?
இப்போது யார் ஆட்சி நடக்கிறது தெரியுமா? விடுதலை அடைந்த 75 ஆம் ஆண்டு விழாவை இந்தியா கொண்டாடி முடித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ரயில்வேயில் சாதாரண பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முதியவர் உடல் நிலை சரியில்லாதாதால் தனது வீட்டின் முன்பு நாற்காலியைப் போட்டு அமர்ந் துள்ளார்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த மயங்க திரிவேதி என்ற பார்ப்பனர் அவ்வழியாக சென்றுகொண்டு இருந்தார்.
அவரைக் கண்டும் அந்த தாழ்த்தப் பட்டச் சமூகத்தைச் சேர்ந்த முதியவர் நாற்காலியில் அமர்ந்திருந்ததால் ஆத்திரம் அடைந்த அவர் அந்த முதியவரிடம் சென்று உயர்ஜாதிக்காரன் ஒருவர் செல்லும் போது எழுந்து நிற்க வேண்டும் என்பது தெரியாதா என்று கேட்டதும் அல்லாமல் யார்
உங்களுக்கு இந்த துணிச்சலைத் தந்தது?
இப்போது யார் ஆட்சி நடக்கிறது தெரியுமா? உங்களை எல்லாம் சாணித் தண்ணியைக் குடிக்கவைத்தால் தான் திருந்துவீர்கள் என்று மிரட்டியுள்ளார்.
முதியவருக்கு உடல் நிலை சரி யில்லை. ஆகையால், சிறிது வெயிலில் உட்கார்ந்து விட்டுச் சென்று விடுவார் என்று முதியவரின் குடும்பத்தார் எடுத்துச் சொல்லியும் கேட்காமல் உடல் நிலை சரியில்லை என்றால் கீழ் ஜாதி என்ற நிலை மாறாது என்று கூறி சண்டையிட்டார்.
மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு போபாலுக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் பழங்குடியின இளைஞர் சட்டை போட்டார் என்பதற்காக அவர் மீது சிறுநீர் கழித்து அதைக் குடிக்கவைத்த கொடூரம் நிகழ்ந்தது.
அப்படி இருந்தும் அங்கு மக்களிடையே எந்த விழிப்புணர்வும் ஏற்படவில்லை. இதனால் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் நடந்துகொண்டே இருக்கிறது.
மத்தியப் பிரதேச தேர்தலில் பா.ஜ.க. 3ஆவது முறை வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.