பிரிட்டனில் உயரும் வெப்பத்தால் வண்ணத்துப் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் காரணத்தை ஆராயும் புதுவித முயற்சியில் இறங்கினர் பிரிட்டன் ஆய்வாளர்கள் பற்பல வண்ணங்களையும் வடிவங்களையும் போர்த்திய எழில் மிகுந்த உயிரினம் வண்ணத்துப்பூச்சி. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
அவற்றை ரசித்துக் கொண்டே ஒவ்வொரு வண்ணத்துப் பூச்சியையும் கணக்கெடுக்கவேண்டும் என்பது சிரமம்தான். ஒரே வண்ணத்துப் பூச்சி மீண்டும் கணக்கில் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை ‘ஙிவீரீ ஙிuttமீக்ஷீயீறீஹ் சிஷீuஸீt’ எனும் வண்ணத்துப் பூச்சிகளைக் கணக்கெடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரிட்டனில் உள்ள யார் வேண்டுமானாலும் அதில் கலந்துகொள்ளலாம்.
பங்கேற்பவர்கள் உள்ளூர்த் திறந்தவெளிகளிலும் பூங்காக்களிலும் 15 நிமிடம் அமர்ந்து அங்கு வருகைதரும் வண்ணத்துப் பூச்சிகளை எண்ண வேண்டும். கண்ணில் படும் வண்ணத்துப்பூச்சியின் இனத்தை அடையாளங் கண்டு அதனையும் குறித்துக் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு 64,000 பேர் கணக்கெடுப்பில் பங்கேற்றனர். 96,257 அந்துப் பூச்சிகளும் பட்டாம்பூச்சிகளும் அப்போது கணக்கில் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.