செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வந்தபிறகு கொங்கு மண்டலத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் உட்பட பலர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். புதிதாக கட்சியில் அய்க்கியமானவர்களுக்கு சால்வை அணிவித்து திமுக உறுப்பினர் அட்டைகளை வழங்கிய அவர், வார்டு வாரியாக தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கவும் அறிவுறுத்தியுள்ளார்.